இனவாதத்தில், ஒரு சகவாழ்வு
சாக்கடையில்
சமுத்திரம் தேடும்
மீன்கள் நாங்கள் !
பூக்கடையில்
புரியாணி கேட்பான்
கொடுப்போம் நாங்கள் !
அடிமைத்தனத்துக்கு
மாற்றுப் பெயர்
வைத்துக் கொண்டோம்
" சகவாழ்வு " !
சாக்கடையில் பூக்கடை யா ?
சாராய போத்தலுக்குள்
ஸம்ஸம் நீரா ?
சரிப்பட்டு வருமா ...?
சிந்திப்போமா ??
இனவாதத்தில் ஒரு
சகவாழ்வு ......
சூனியம் -
இனவாதத்தில் ஒரு சகவாழ்வு
கானல் நீர் -
இனவாதத்தில் ஒரு சகவாழ்வு
முதலைக் கண்ணீர் - !
நொண்டிக் குதிரை
பந்தயத்தில் ஒடுமா?
கூண்டுக்குயில் பாடுமா ?
கானமயில் ஆடும்
ஊன மயில் ஆடுமா ??
வாளில்லா பட்டம்
வானில் பறக்குமா ?வாதத்தில் வாழ்வு தான் பிறக்குமா ?
கேள்விகள் மட்டுமே
என்னிடத்தில் -
பதில் தருவார் யார் ? இனவாதத்தில் சகவாழ்வு
முளைக்குமா பார் ??
மைத்திரி வந்தால்
மாறுமென்றும் -
ராஜபக்ஷ வந்தால்
ராஜயோக மென்றும்
எண்ணிய எங்கள்
பச்சோந்தித் தலைகளின்
தலைவர்களின்
பகல்கனவு சுக்குநூறாச்சு ..
மக்கள் எம் வாழ்வோ
நொந்து நூலாச்சு !
இனவாதம் - -
கை கோர்த்து
விரள்களை கழட்டிக் கொள்ளும்
கால் தடுக்கி விழுந்தாலும்
அலட்டிக் கொள்ளும் !
எனக்கு தாடி
உனக்கு மொட்டை -
எங்களுக்கு
தலை முதல் கால் மறைக்கும்
அபாயா
உங்களுக்கு
அக்குள் காட்டும் கவுன்
தொப்புள் காட்டும் லெகின் -
பார்க்க முடியவில்லை
எனும் ஆதங்கத்தில் நீ_
பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே
எனும் கடுப்பில் நான் !
உன் காவியே
உனக்குப் பெரிசு -
என் ஆவியும்
எனக்கு தூசு !
துருவங்கள் இனையாது
இனவாதம் - சகவாழ்வு
துருவங்கள்
இனைக்காது ஒரு நாளும்
பருவங்கள் !
நண்பா !
கோடி கொடுத்தாலும்
பெட்டை கோழி கூவாது
சேவல் முட்டை போடாது
காளை மாடு கறக்காது
இனவாதத்தில் ஒரு
சகவாழ்வு பிறக்காது !
சுயவிருப்பும் , சுதந்திரமும்
அவனவன் கைத்தடி -
சுழற்றும் வட்டத்துக்குள்
மூக்கை நுழைத்தது
யார் தப்பு ??
தப்பை
சரியாகச் செய்கிறது
இனவாதம் !
ஆக ...
இனவாதத்தில் ஒரு
சகவாழ்வு .....
காளை கன்று போட
வாலைத்தூக்கிப்
பார்த்திருந்தவன் முகத்தில்
சானம் விழுந்த கதை !!
o
கம்மல்துறை எம்மெல் .ஷரான்

நன்றி
ReplyDeleteசாியான கோர்வை பிரமாதம்.........!
ReplyDeleteசமுதாயத்தின் ஒரு சோகமான நிலமையை அழகாக வெளிப்படுத்துகின்றன இந்த வரிகள்.
ReplyDeleteBeautifully crafted and worthy of many praises.