முக்கிய நீதிமன்றத் தீர்ப்பு, அடுத்தவாரமே வெளிவரும்
நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பை இரத்துசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நீதிமன்ற விவாதங்கள் இன்றுடன் நான்கு நாட்கள் நடைபெற்றது. இறுதி விவாதங்களை கேட்ட நீதிபதிகள் விரைவில் தமது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளனர்.
அதற்கான தினம் குறிக்கப்படாத நிலையில், அதுவரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும், தற்போது நாட்டில் பிரதமர் இல்லை. அத்தோடு மஹிந்த ராஜபக்சவும் பிரதமர் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment