பன்நூலாசிரியர் மடவளைக் கலீல், கலாபூசணம் விருது பெறுகிறார்
இரு மொழிக் கவிஞரும், பன்நூலாசிரியருமான மடவளைக் கலீல் கலாசார அலுவல்கள் திணக்களத்தால் வழங்கப்படும் அதி உயர் விருதாகா கலாபூசணம் விருதை பெற உள்ளார்.
இம்மாதம் 15ம் திகதி கொழும்பு தாமரைக் தடாக மண்டபத்தில் (நெலும் பொக்குண) நடைபெறும் மாபெறும்; அரச விருது விழாவான கலாபூசணம் விருது விழா ஜனாதிபதி மைந்திரிபால சிரிசேனா தலைiயில் இடம் பெற உள்ளது. நாட்டில் கலைத்துறைக்காக சேவை செய்த பல்வேறு கலைஞர்களும் கௌரவிக்கப்படும் இவ்விழாவில் மாத்தளை மாவட்டத்தில் முஸ்லிம்கள் சார்பாக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கலசசார அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தில் பொலீஸ் சார்ஜண்ட் ஆகப் பணிபுரிந்த இவர் தமிழ், சிங்கள மொழிகளில் சரளமாகக் கவிதை இயற்றிப்பாடக்கூடியவர். இவர் இதுவரை 4 நூல்களை வெளியிட்டுள்ளார். அதில் சிங்களக் கவிதை நூலும் ஒன்றாகும்.
கொழும்பு, காலி, வல்வெட்டித்துறை , ஒட்டிசுட்டான், தம்புல்ல, மன்னார், மாத்தலை போன்ற பல இடங்களில் இவர் பொலீஸ் துறையில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப்பிரிவு, கம்பி இல்லா தொலைத் தொடர்பு டெலிகிராபி இயக்குனர், பொலீஸ் சமிக்ஞை பிரிவு போன்ற பல பதவிகளை வகித்த இவர் இறுதியாக மாத்தளை பொலீஸ் நிலையத்தில் கம்பியில்லா தொலைத் தொடர்பு பிரிவில் சார்ஜண்ட தரத்தில் பணியாற்றினார்.
இவர் 1992ல்; துயறக் கொழுந்துகள் என்ற கவிதை நூலை வெளியிட்டார், பின்னர் 1993ல் கைதிப் புறாக்கள், 1995ல் இதயக் கதவுகள் (சிறுகதை) அதன் பின்னர் 'அவிய பிமதபமு' (ஆயுத்ததைக் கீழே வைப்போம்) என்ற சிங்கள நூலையும் 1998ல் வெளியிட்டார். அவிய பிபதபமு என்ற இவரது சிங்கள நூல் பாரிய வரவேற்பை பெற்றது. ஆயுதப்படையுடன் தொடர்பு பட்ட ஒருவர் யுத்தகாலத்தில் சமாதானம் வேண்டி மாற்று மொழியில் வெளியிட்ட நூலை பலரும் பாராடடினர். இது பிரதேச ரீதியில் பல விறுதுகளை பெற இவருக்கு வாய்ப்ளித்தது. குறிப்பாக மத்திய மாகாண சாகித்திய விருது, சாமஸ்ரீ தேச கீர்த்தி, ரத்தினதீபம், மடவளை டொப் டுவன்டி கலைஞர் விருது, உற்பட பல்வேறு விருதகளைப் பெறக்காரணமாகியது. கடந்த மாதம் மாத்தளையில் நடை பெற்ற கல்வி அமைச்சின் தமிழ் மொழி தின விழாவிலும் இவர் கௌரவிக்கப்பட்டார்.
மடவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஊடக வியலாளர் கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ் அவர்களின் இளைய சகோதரராவார். மாத்தளை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் பரீனா கலீலின் கணலரான இவர் தற்போது மாத்தளை மாவட்ட உக்குவலையில் தனது துணைவியாருடன் வாழ்ந்து வருகிறார்.

Post a Comment