Header Ads



மக்கள் வீதியில் இறங்கி, கொள்ளையிட்டு சாப்பிடும் நிலை ஏற்படும்

நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக மக்களால் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தற்போது முழு நாட்டு மக்களும் கடும் வெறுப்பில் இருந்து வருவதாகவும் நாட்டின் தலைவர் உடனடியாக தலையிட்டு இந்த நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை என்றால், மக்கள் வீதியில் இறங்கி கொள்ளையிட்டு சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுத்துறையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை கூற முடியாது.

வழக்கு தீர்ப்பு பற்றி பேசினால், எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனக்கு அங்கத்துவத்தை வழங்கியிருந்தாலும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்காரன் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.