Header Ads



வடக்குகிழக்கு முஸ்லிம்களின் அறியாமை - உடனடியாக விண்ணப்பியுங்கள்

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்களில் பெரும்­பா­லானோர் நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்­காமை அறி­யப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பகு­தி­களைச் சேர்ந்த அநேகர் அறி­யாமை கார­ண­மாக விண்­ணப்­பிக்கத் தவ­றி­யுள்­ளனர். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அசையும், அசை­யாத சொத்­து­க­ளுக்கும் மத நிலை­யங்­க­ளுக்­கு­மான நஷ்­ட­ஈ­டு­க­ளுக்கு  விண­்ணப்­பிக்­கா­த­வர்கள் உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கும்­படி வடக்கு அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு பிர­தி­ய­மைச்சர் காதர் மஸ்தான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

“யுத்­தத்­தினால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பு­க­ளுக்கும் அமைச்சு நஷ்­ட­ஈ­டுகள் வழங்கி வரு­கி­றது என்­றாலும் அறி­யாமை கார­ண­மாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட, கிழக்கு மக்கள் நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்கத் தவ­றி­யுள்­ளனர். அவ்­வா­றா­ன­வர்கள் வடக்கு அபி­வி­ருத்தி மீள் குடி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு அமைச்­சி­ட­மி­ருந்து அதற்­கான விண்­ணப்­பங்­களைப் பெற்றுக் கொள்ள முடியும். விண்­ணப்­பங்கள் கிடைக்கப் பெற்­றதும் அவை ஆரா­யப்­பட்டு, உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு நஷ்டஈடுகள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளில் அமைச்சின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

8 comments:

  1. Please get the application form and address of the officers to be contacted regarding the compensation and publish that in the jaffna muslim. Com and in newspaper.

    ReplyDelete
  2. Also ask Cader Masthan to publish this news in newspapers.

    ReplyDelete
  3. இந்த நஷ்ட ஈடு ஜெனிவா தீர்மானத்திற்கு அமைய, இறுதி யுத்த கால்பகுதியில் பாதிக்கபட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது

    ReplyDelete
  4. 1990 முதல் பல தடவைகள் பதிந்தும் அவை பயனற்று போயிற்று

    ReplyDelete
  5. 1990 முதல் பல தடவைகள் பதிந்தும் அவை பயனற்று போயிற்று

    ReplyDelete
  6. Ajan உங்க வவுணதீவில் சல்லட போட்டு தேடுயினம். சும்ம சத்தம்போடமா இரும்மப்பா.

    ReplyDelete
  7. பாதிக்கப்பட்டவர்கள் தான் விண்ணப்பிக்க போகிறார்கள். கிடைப்பவர்களுக்கு கிடைக்கட்டும்.

    ReplyDelete
  8. @Abdulla, தேடவேண்டியது உங்க ISIS முஸ்லிம்களை தான்

    ReplyDelete

Powered by Blogger.