Header Ads



மகிந்த ராஜபக்ச செய்த முட்டாள்தனம், அவரது சட்டநிபுணர் கடும் ஆத்திரம்

மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, மகிந்தவுக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

மகிந்தவின் சட்டவாளராக இருந்த போது, எனது ஆலோசனைகளை, அவர் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தார்.

இப்போது நடக்கும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து, இப்போது நாட்டில், பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு இப்போது மிகவும், மோசமான உறுதியற்ற நிலையில் இருக்கிறது. நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரே இப்போது, மிகவும், சரியான முடிவை எடுக்க வேண்டும்.

இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசியலமைப்பில் வழியில்லை. ஆனால், அதிபர் தேர்தலை நடத்துவதற்கு சட்ட வழிமுறை உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. அவர் 26ம் திகதி பிரதமர் பதவியேட்கும் நேரத்தில் சொல்லியிருக்கலாமே.

    ReplyDelete
  2. Even a laymen understands this but stupids Sirisena and Mahinda don't get it.

    ReplyDelete
  3. MR is made to lose By MY3 consecutively 2nd time.....

    1st....
    In the past MY3 toppled MR during last president election..

    2nd....
    At present Same has spoiled MR name inside and out side the
    country permanently by dragging him in to Minister post
    illegally.

    ReplyDelete
  4. அப்ப நீங்க அயிடா குடுத்துதான் 2015 ஜனாதிபதி தேர்ல்ல அவர் தோத்தாரோ

    ReplyDelete

Powered by Blogger.