Header Ads



மஹிந்தவை பிரதமர் என, குறிப்பிடப்படுவது பற்றி மரிக்கார் குற்றச்சாட்டு

ஊடகங்கள் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் எனக் குறிப்பிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்றைய தினம் -05- உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்கள் மஹிந்த தரப்பினை ஆளும் கட்சி எனவும், மஹிந்தவை பிரதமர் எனவும் குறிப்பிட்டு வருவாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சில நாளிதழ்கள் இன்றும் மஹிந்தவை பிரதமர் எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

மஹிந்த பிரதமராக செயற்படவும், அமைச்சர்களின் செயற்பாடுகளுக்கும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.