Header Ads



இது நியாயமா..?

யாழ்ப்பாண மாவட்டத்தில்  பல்வேறு வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு தமிழர் பகுதிகளில் அவை முழுமை பெற்றுவிட்டது. அண்மையில் விடுவிக்கப் பட்ட சில பகுதிகளிலேயே வீடமைப்பு தேவைப் படுகின்றது. ஆனால் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தில் 2009 இல் யுத்தம் முடிவடைந்த காலம் முதல் கடந்த 8 வருடங்களாக 2100 குடும்பங்கள் வீடமைப்புத் திட்ட உதவி கேட்டு விண்ணப்பித்திருந்த போதிலும் அவர்களில் 200 குடும்பங்களுகே வீடுகள் கட்டுவதற்கான பண உதவி வழங்கப் பட்டுள்ளது. 

இன்நிலையில்  கடந்த 2017 ஆம் ஆண்டு 200 வீடுகள் கட்டுவதற்காக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட 160 மில்லியன் ரூபா திருப்பி அனுப்பப் பட்டுள்ளது. 

இந்த வருடமும் வடக்கின் பல்வேறு அரசாங்க அதிபர் செயலகங்களில் இருந்து வடக்கு   முஸ்லிம்களின் நலன்களுக்காக ஒதுக்கப் பட்ட 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை திருப்பியனுப்பப் படவும் வேறுதேவைகளுக்கு உபயோகப் படுத்தப் படவும் உள்ளன. 

யாழ் மாவட்ட அரச அதிபர்  என். வேதநாயகன் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிய போது தமிழர்களுக்கு ஒதுக்கப் பட்ட நிதியை நூற்றுக்கு நூறு விகிதம் உபயோகப் படுத்தி தமிழர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் இவருடைய யாழ்ப்பாண மாவட்ட செயற்பாடுகள் பின்னைடைவைச் சந்தித்திருக்கின்றன. தமிழருக்கு ஒதுக்கப் பட்ட நிதியை நூற்றுக்கு நூறுவிகிதம் உபயோகப் படுத்தும் இவர் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் படும் நிதியை நூற்றுக்கு நூறு விகிதம் திருப்பியனுப்புவது நியாயமா?

7 comments:

  1. “பாதிக்பட்ட தமிழர்களுக்கு ஜெனிவாவில் நீதி கிடைத்துவிடக்கூடாது” என்பதற்காக “மகிந்த ஆதரவு” ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்களும், யுத்தத்தில் தமிழ் மக்கள் இறந்ததை வெடி கொழுத்தி கொண்டாடியவர்களும் பின்னர் தமிழர் பகுதிகளில் இலவசமாக வீடுகள் கேட்பது நியாயமா?

    ReplyDelete
  2. இது நூற்றுக்கு இருநூறு வீதம் சரி. முஸ்லீம் அமைச்சர்கள் தானே வடக்கிலே சட்டவிரோதமான குடியேற்றங்களை உருவாக்குகின்றார்களே. அத்து மீறி குடியேறிய முஸ்லிம்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கினால் முஸ்லிம்களின் அடாவடித்தனத்தை அனுமதிப்பதட்கு சமனாகும். மற்றும் முஸ்லிம்கள் பக்கத்தில் இருப்பதையும் எந்த தமிழர்களும் விரும்புவதில்லை.

    ReplyDelete
  3. @Anusath,
    அப்படி என்ன அடாவடித்தனத்தை செய்து விட்டார்கள்.. உங்களது பக்கச்சார்பு ஊடகங்கள் கூட வெளியிடாத அடாவடித்தனம்..

    ReplyDelete
  4. மஹிந்த LLTE க்கு பீ தின்ன குடுத்தத நினச்சா இப்பவும் வெடில் கொளுத்தனும் போலதான் இருக்கு.. ஏன் என்டா முஸ்லிம் மக்களுக்கு LTTE செய்த அநியாயம் அப்படி, முஸ்லிம் மக்களை 2 மணி நேரத்தில் வெளியேற்றிய போது "டமில்" சமூகம் என்ன ஆர்ப்பாட்டம் செய்து தடுத்த மாதிரி பேசுறீங்க.. அதென்ன தம்பி தமிழர் பகுதி. விலைக்கு வாங்கிட்டீங்களா.. முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் அவர்களது சொத்துக்களையும் வீடு வாசல்களையும் அனுபவித்து ஏப்பம் விட்டது மறந்து விட்டதா..

    ReplyDelete
  5. @செய்யமுனைபவர், Ltte வேறு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் வேறு.
    ஜெனிவா தீர்மானம் Ltte யின் மனித உரிமை மீறல்களுக்கும் எதிரானது தான்.

    நீங்கள் Ltte யால் பாதிகபட்டிருந்தால், Ltte இருக்கும் போது கேட்கவேண்டியது தானே. அப்போ கோலைகளாக ஒழிந்து, இருந்துவிட்டு, பின்னர் இந்த தலைமுறை தமிழர்களிடம் கேட்க முடியாது.

    அப்படியானால் உங்கள் ISIS முஸ்லிம் பயங்கரவாதிகள் உலகெங்கும் செய்து வரும் கொலைகள், கற்பழிப்புகளுக்கு நீங்கள் பொறுப்பு கூறுவீர்களா?

    மகிந்த விடம் கேட்க பாருங்கள், அம்பாந்தோட்டையில் ஓசி வீடுகள் தரசொல்லி.

    ReplyDelete
  6. பிழைப்புக்காக என்ன வேனா பேசுவீர்கள் என்பது தெரியும்...
    LTTE என்றால் தமில் மக்கள், தமிழ் மக்கள் என்றால் LTTE என்று வீர முழக்கம் முழங்கிய டமில் வீரர்கள் எங்கே.. அவங்க வேற நாங்க வேற என்று பம்முற கோழைகள் எங்கே...
    LTTE தோற்கடிக்குப்புக்கு மட்டுமே இலங்கை முழுவதும் வெடில் கொழுத்தினார்கள்..

    ISIS முஸ்லிம் அமைப்பு என்று இப்போதும் நம்பிக்கொண்டிருந்தால் உங்களை விட ஒரு முட்டாள் யாரும் இல்லை,
    2 லட்ஷம் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டு இப்போது கிட்டத்டட்ட3 தசாப்தங்களாக அநாதைகளாக அகதிகளாக இருந்த சமூகம் சொந்த இடத்திற்கு திரும்பினால், அராஜகம் என்று சொல்லும் நீங்கள், அந்த மக்களின் இடத்தையும் வாழ்வாதாரத்தையும் சுருட்டியது மட்டுமில்லாமல் தமிழர் பகுதியில் இடம் கேட்கிறார்கள் என்று கதையளக்கிறீர்கள்..
    மகிந்தட்ட மட்டுமில்ல எந்த ஐரோப்பிய, கனடா பிச்சைக்காரர்களிடமும் சரி எதுவும் கேட்டுப்பெற வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.