Header Ads



சகல அமைச்சர்களின் பொறுப்பும், அமைச்சு செயலாளர்கள் வசம் - ஜனாதிபதி உத்தரவு

அனைத்து அமைச்சர்களின் பொறுப்பும் அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்து.

நீதிமன்ற உத்தரவை ஏற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 24 மணித்தியாலங்குள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாமல் தொடர்ந்து செயற்படும் நோக்கில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாட்டின் பாதுகாப்பு, பொது மக்களுக்காக தங்கள் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுமாறு அனைத்து அரச சேவைகள், முப்படை மற்றும் பொலிஸ் சேவைகளுக்கு ஜனாதிபதி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

3 comments:

  1. He will continue to move for next step after every result....

    Fate of this sweet-land.

    ReplyDelete
  2. ‘PRESIDENT’ One post he could NOT do as a good president. What is he going to do with all ministerial post???. Expect a very BIG DISASTER soon in Srilanka….
    Don’t know what monkey will do with the all the knife in the hand. Oh! God Protect our country.

    ReplyDelete
  3. ‘PRESIDENT’ One post he could NOT do as a good president. What is he going to do with all ministerial post???. Expect a very BIG DISASTER soon in Srilankan….
    Don’t know what monkey will do with the all the knife in the hand. Oh! God Protect our country.

    ReplyDelete

Powered by Blogger.