Header Ads



எனக்கு, வெறுத்து போய்விட்டது - சஜித் கவலை

உண்மையை கூறுவதாக இருந்தால் எனக்கும் வெறுத்துப் போய்விட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஐம்பது உதாகம கிராம திட்டங்களை கைளித்து விட்டோம். தினமும் நான்கு உதாகம கிராம திட்டங்களை ஆரம்பித்தோம். தற்போது அந்த திட்டங்கள் எங்கே போய்விட்டன.

தற்போது நாட்டில் காட்டுச் சட்டங்களை பின்பற்றி வருகின்றனர். காலையில் சாப்பிடும் போதும், இரவில் தூங்கும் போது அதிகாரத்தை பற்றியே பேசுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.