Header Ads



தமிழர்கள் அமைதியான, வாழ்வை விரும்பாவிடின்...?

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் இராணுவத்தினரும் , பொலிஸாரும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

சிங்கள மக்களுக்கும் சரி இராணுவத்திற்கும் சரி தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விருப்புகின்றனர். யுத்தத்திற்கு முன்னரான கால பகுதியில் தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் நட்புடன் வாழ்ந்தார்கள்.

யுத்த காலத்தில் துன்பட்ட தமிழ் மக்களின் வாழ்வினை இன்பமான வாழ்வாக மாற்றுவது எமது பொறுப்பாகும். எனவே தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறே தொடர்ந்து அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என.

இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், காவல் துறையை சேர்ந்தவர்களும் . இராணுவத்தினரும் வீதியோரங்களில் காவல் நிலையங்களை அமைத்து வீதியில் செல்வோரை வழிமறித்து சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும். அதனால் இந்த அமைதியான வாழ்வை வாழ வேண்டும்.

அதேபோல இராணுவத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக தமிழர்கள் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த அமைதியை யாராவது ஒருவர் குலைக்க விரும்பினால் அவர்களுக்கு தமிழ் மக்கள் தைரியம் கொடுக்காது அவர்களை வலுவிழக்க செய்து இந்த நாட்டின் அமைதியை பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் கூறுவதை நம்புங்கள். நான் எனது மனதில் தோன்றுவதனை சொல்கிறேன். அதனால் நாம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம்.

இராணுவத்தினர் ஆகிய நாம் இந்த வேலை திட்டத்தை மேற்கொண்டு, எதிர்காலத்தில் அரசியல் நோக்குடன் வாக்கு கேட்டு இந்த வேலை திட்டங்களை செய்யவில்லை.

யாழில் வாழும் தமிழர்கள் அன்புடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

7 comments:

  1. He is 100 % correct.. Some foolish tamil don't want peace. ..

    ReplyDelete
  2. பயங்கரவாதிகளுக்கு மீண்டுமொருமுருறை கொடுத்தால்தான் இந்த நாடு நிம்மதியாக இருக்கும்

    ReplyDelete
  3. very good motivation

    ReplyDelete
  4. Isis தானே 2 பொலீசை சுட்டது

    ReplyDelete
  5. அஜன் அண்ணே... இப்ப மேட்டர் சீரியஸ், உங்களுக்கு கொஞ்சம் முத்திட்டு எண்டு விளங்குது எங்களுக்கு.

    ஆகவே தனிமையை தவிருங்கள், உதவிக்கு எப்போதும் ஆள் வைத்துக் கொள்ளுங்கள். மருந்து மாத்திரைகளை நேரந்தவறாமல் பாவியுங்கள். சிறந்த மனநல மருத்துவர்கள் நாடெங்களும் உள்ளார்களாம், உங்கள் உள நோய்களில் கரிசனை காட்டுங்கள். மருத்துவத்திற்காக ஏதும் பொருளாதார சுமைகள் இருந்தால் கூச்சப்படாமல் தெரிவியுங்கள், நாங்கள் என்றும் உங்கள் சகோதரர்கள். முடிந்தவரை உதவி செய்வோம்.

    ReplyDelete
  6. @அடேய் அஜன் நீங்கள் இல்லாத isis ஸை காட்டி தமிழ் தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்த்துகொண்டுவருவதை சிங்களவன் விளங்கிக்கொண்டான். போலீஸ்காரனை கொன்றுவிட்டு நீங்கள் இனி எப்படி நிம்மதியாக வாழப்போகிறீர்கள்? இனி நடக்கும் அனைத்தையும் பொறுமையாக இருந்துப்பார். கிழக்கு தமிழ் பயங்கரவாதிகளுக்கு பெரிய அடி காத்துக்கொண்டிருக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.