ரணில் மீது, நம்பிக்கை இருக்கிறதா? 12 ஆம் திகதி, பாராளுமன்ற விவாதம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், நம்பிக்கை பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணி எம்.பி க்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, குறித்த பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் புதன்கிழமை (12), நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறித்த பிரேரணை கையளித்துள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நிலைப்பாட்டில், ஐக்கிய தேசிய முன்னணியினர் ஒன்றிணைந்து செயற்படுகின்றனரென, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

Post a Comment