Header Ads



ஜனாதிபதியின் ஜனநாயகத்துக்கு, முரணான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் - ரணில்

மக்களின் இறைமையும் அவர்களின் வாக்குரிமைகளும் பாராளுமன்றத்தினூடாகவே பாதுகாக்கப்படுகின்றது. அவ்வாறான பாராளுமன்றத்தினையும் அரசியலமைப்பினையும் பாதுகாக்கும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடமே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

மேலும் வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற ஜனநாயகம் மீறப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் இவ்வாறான ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

விகாரமகாதேவி பூங்கவில் சிவில் சமூகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மதகுருமார்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தொனிபொருளில் சத்தியாகிரக போராட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போரட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதன்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மகஜரில் ரணில் விக்ரமசிங்க  மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்களான சாகல ரத்நாயக்க, எரான் விக்ரமரத்தன மற்றும் கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்டோரும் கையொப்பமிட்டனர். 

No comments

Powered by Blogger.