Header Ads



தேசிய அரசாங்கம் தொடர்பில், மைத்திரிபாலவிடம் முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்

தேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தில் கடந்த மூன்று வருட காலமாக இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்க ஆணைக்குழு அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல்களை மாத்திரமே வெளிப்படுத்தியுள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு ரணில் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கப்படவில்லை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமே உருவாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.