முடிந்தால் மீண்டும் பெரும்பான்மையை, நிரூபித்துக் காட்டுங்கள் - ரணில் சவால்
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தால், முடிந்தால் நாடாளுமன்றில் வியாழக்கிழமை பெரும்பான்மையை நிரூபித்து காட்டுமாறு மைத்திரி - மகிந்த தரப்பினர்களுக்கு ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார்.
“மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்துள்ளனர். இதனால் மகிந்த ராஜபக்வின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பின் 42வது சரத்திற்கு அமைய அந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை பதவி நீக்கியமை, புதிய பிரதமரை நியமித்தை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்கள் சட்டத்திற்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ளும் வாக்கெடுப்பு ஒன்றே நடத்தப்பட்டது. இது மக்களின் ஆணைக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பிரச்னை பெரும்பான்மையல்ல தலைவர் அவர்களே! இந்த சிரிசேனயும் அந்த பூருவன்ஸவும் ஒன்றைத்தான் சொல்கின்றனர். நாட்டின் பிரதமரை நியமிக்க பெரும்பான்மை அவசியமில்லையாம். சிரிசேனக்கு சரி எனக்கண்ட யாரையும் பிரதமராக நியமனம் செய்யலாமாம். அதன்படி இந்த அரசாங்கம் ராஜபக்சவின் தலைமையில் இயங்குமாம். அதை மாற்ற ஒரு பெரும்பான்மையும் தேவையில்லையாம். எனவே தான் சபாநாயகர் நேற்று பெரிய பிழையை விட்டாராம் என இப் போது பூருவன்ஸ கூட்டம் கத்தித் திரிகின்றது. நாட்டு மக்களும் நாடும் பொருளாதாரமும் அதள பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கின்றது. அதுபற்றி அந்த சிரிஞ்ச சேனைக்கோ பூருவன்ஸக்போ அவனுடைய கூட்டத்துக்ேகா எந்தப் பிரச்னையுமில்லை. இந்த இரண்டு சைத்தான்களை விட்டு சிவப்புக்கு மக்கள் தங்கள் பெறுமதியான வாக்ைக ஒருமுறை வழங்கிப்பார்ப்பது நல்லது போல் தெரிகிறது.
ReplyDelete