Header Ads



சஜித், கரு, நவீன் ஆகிய மூவரில் ஒருவரை பிரதமராக நியமிக்க தயார் - ஜனாதிபதி மைத்திரி


எக்காரணம் கொண்டும் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய அல்லது நவீன் திசாநாயக்க ஆகியோரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால் அதனை பரிசீலிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னிணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுதீன் மற்றும் மனோ கணேசன் ஆகியோரை  சந்தித்து பேசிய போது ஜனாதிபதி இவ்வாறு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அலரி மாளிகைக்கு சென்ற குறித்த மூவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேசியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.