ஆபாசப்படம் பார்த்த அரசியல்வாதிகள் - மேல் மாகாண சபையில், முதலமைச்சர் உரையாற்றும்போது அசிங்கம் (படங்கள்)
மேல் மாகாணசபையில் நேற்று -19- வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேல் மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
முதலமைச்சர் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பத்தரமுல்லவில் அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண சபை உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வ கணினி உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கணினிகளிலேயே, வயதான மாகாணசபை உறுப்பினர்கள் கூட, ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பாராளுமன்றில் MP சாறத்தை உயர்த்தி தன் மர்ம உறுப்புக்களை நேரடியாக காட்டுவதுடன் ஒப்பிடுகையில் மாகாணசபையில் ஆபாசப்படம் பார்த்தது தப்பில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்து மாகாணசபையில் ஆபாசப்படம் பார்க்கலாம் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
ReplyDeleteசிறிலங்கன்களே நம்நாடு எங்கே சென்று கொண்டிருக்கின்றது????