அப்துர் ராசிக் மீதான மத நிந்தனை வழக்கு, அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு.
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் சிங்கள மொழியில் ஆற்றிய ஓர் உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்று குற்றம் சாட்டி பொது பல சேனா இனவாத அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் (15.11.2018) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் ஆற்றிய உரையில் பௌத்த மதத்தை நிந்தித்தார் என்று குற்றம் சாட்டியே இனவாத அமைப்பான பொது பல சேனா குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
குறித்த வழக்கு விசானையில் சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மற்றும் நுஷ்ரா சரூக், அக்ரம் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கின் அடுத்த விசாரனை எதிர்வரும் 28.03.2019ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

Post a Comment