Header Ads



இதுதான் நான், திண்ட அப்பம் (புல்லரிக்குது...!...)

-மொஹமட் சுஹைல்-

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே ஆப்பைக் கடையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான் நான்.

பாராளுமன்றத்தை மூடினேன்.. ஆட்சியைக் கலைத்தேன்.. யாப்பை மீறினேன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. பாராளுமன்றத்தை மூடினேன்  பாராளுமன்றம் கூடாதென்பதற்காக அல்ல ரணில் பெரும்பான்மையைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக. பாராளுமன்றத்தைக் கலைத்தேன் டைம் பாசுக்காக அல்ல ரணில் பிரதமராக இருக்கக் கூடாது என்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை, இலங்கையில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. 

Bites ற்காக கெட்ட கஜுவைத் தின்றுவிட்டு பைட் ஆகி நல்ல கஜுவை வைக்கச்சொன்னனே அதைப்போல

என்னைக் குற்றவாளி, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள கஸ்ட்டங்கள் நஸ்ட்டங்கள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.  நல்ல கஜு இருக்கவில்லை என் ப்ளைட்டில் நாய் திண்ணா கஜுவைத் தின்றிருக்கிறேன். 

புரியாணிகள் ஃப்ரைட் ரைஸ்கள் தின்றதில்லை நான் ஆனால் ஆப்பையும் வாழையிலைச் சோறும் தின்றிருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

இலங்கை திருநாட்டிலே பொலனறுவையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர். அரசியல்வாதிகளின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சுதந்திரக் கட்சி! என்னை வளர்த்தது. என்னை ஜனாதிபதியாக்கியது. ஜனாதிபதியானதும் ஆவலோடு அலுவலகம் வந்தேன். பிரதமர் கதிரையைப் பிடித்துக்கொண்டு இதோ உங்கள் முன்னிலையில் நிக்கிறானே ரணில், இவன் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். அதிகாரத்தைப் பறிகொடுத்தேன், அவமானப்படுத்தப்பட்டேன் கடைசியில் பைத்தியமாக மாறினேன். தேடிச் சென்ற ரணிலைக் கண்டேன், காணக்கூடாத கோலத்திலே. ஆம் ஒரு பட்டாம்பூச்சியாக.

எனது பெயரோ மைத்ரி தரித்திரமான பெயர். ஜனாதிபதி என்ற மரியாதையுமில்லை. நல்லா இருந்த பெயர் நாசமாகிவிட்டது. கையில் பதவி மனதில் கவலை. அலைந்தேன், ரணிலை விரட்ட நான் அலைந்தேன்.

எனக்கு கருணை காட்ட முன்வந்தனர் பலர். அவர்களிலே வண்ணாத்திக் காளையர்கள் சிலர் அவர்களுடன் காதலைக் கேட்டனர். இதோ உங்கள் முன் நல்லவன் போல் நிக்கிறானே இக்கொடியவன், பகட்டால் என்னைக் கண்டம் பண்ண முயன்றான் நான் தடுத்திராவிட்டால் என்னை அப்போதே கண்டம் பண்ணியிருப்பான்.

மகிந்த பக்தர்களும் எனக்கு கருணை காட்ட முன்வந்தனர். பிரதியுபகாரமாக பிரதமர் பதவியைக் கேட்டனர். அதில் பிரதானமானவந்தான் இந்த மகிந்த. உடனே பிரதமராக்கும்படி கேட்டான். ரணிலை விரட்ட ரணிலிடமிருந்து என்னைக் காக்க. வேறு வழியில்லாம ஏற்றுக்கொண்டேன்.

அப்பத்தை தின்றுவிட்டு அந்தத் திண்ணையிலே படுத்து உறங்கியிருப்பேன். என்னை ஜனாதிபதியாகத் தூண்டி சிக்கலுக்குள் தள்ளிவிட்டது இந்த ரணில்தான். கிடைத்த வாய்ப்பை விட்டுவிட நான் விரும்பவில்லை. அதனால் இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக விரும்பினேன். பதவிக்கு வந்ததும் மனம் மாறுவது விந்தையல்ல. உலக உத்தமர்(?), அஹிம்சா மூர்த்தி(?), ஜீவகாருண்ய சீலர்(?) மகிந்த, அவரே மூன்றாம் முறையும் ஜனாதிபதியாக ஆசைப்பட்டிருக்கிறார். இந்த பதவியின் மேலிருந்த மோகத்தால். அந்த முறையைத்தான் நானும் கையாண்டிருக்கின்றேன்.இது எப்படி குற்றமாகும்.

நான் விட்டுக்கொடுத்திருந்தால் ரணிலின் வண்ணாத்திக் குடும்பத்திலே நானும் சிறகடித்திருக்கலாம், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருந்தால் ரணிலின் மடியில் ஒருநாள் மங்களவின் மடியில் ஒருநாள் என்று ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

மகிந்த ஒரு பக்கம் விரட்டினான் ஓடினேன், கோத்தபாய என்னை விரட்டினான் ஓடினேன், ரணிலும் என்னை விரட்டினான் ஓடினேன்…. ஓடினேன் ஓடினேன் கோல்பேஸ் தொங்கல் வரை ஓடினேன்.. அங்கே ஆப்பைக் கடையிருந்ததால் அங்கயே அமர்ந்துவிட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும் ஆட்சியை நிம்மதியாய் செய்ய விட்டிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? நிம்மதியாக ஆழவிட்டார்களா என்னை?

ஜனாதிபதியான என்னை அதிகாரமில்லாமல் ஆக்க நினைத்த பாவிக்கு பாடம் புகட்ட நினைத்ததில் என்ன தவறு?

நான் பாராளுமன்றத்தை மூடியது ஒரு குற்றம்,பிரதமரை மாற்றியது ஒரு குற்றம், பாராளுமன்றத்தைக் கலைத்தது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்..? என்னை அதிகாரம் பண்ண விடாமல் தடுத்தது யார் குற்றம்? நல்லாட்சியின் குற்றமா? இல்லை நல்லாட்சியைச் சொல்லிச் சொல்லி என்னை மட்டம்தட்டிய ரணிலின் குற்றமா?

மோசடி செய்த அர்ஜுன மகேந்திரனை தப்பிக்க விட்டது யார் குற்றம்? பொலிசாரின் குற்றமா? இல்லை தன் பதவியைப் பயன்படுத்தி தப்பிக்க விட்ட ரணிலின் குற்றமா?

என்னைக் கொல்ல சதி செய்தது யார் குற்றம்? இந்திய ரோவின் குற்றமா? இல்லை அதைத் திட்டம் தீட்டிய ரணிலில் குற்றமா?

 இக்குற்றங்கள் புரிந்த ரணிலை வீட்டுக்கு அனுப்பும்  வரை  மைத்ரியும் அவனது அட்டகாசங்களும் குறையப்போவதில்லை. இதுதான் நான் திண்ட அப்பம், வாழையிலைச் சோறு என்பன என்னுள் வளர்த்துவிட்ட பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்

மொஹமட் சுஹைல்.


8 comments:

  1. பழைய தமிழ் படம் ஒன்றின் உல்டா. சொந்தமாக எழுதுங்கோ

    ReplyDelete
  2. Chirappaana katpanai.

    ReplyDelete
  3. பரா சக்தி பாணியில் மைத்திரி ....போட்டோவில் பைத்திய கோலத்தில் போட்டிரிருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.