அமைச்சரவை இன்று கூடுகிறது - சு.க.யின் அமைப்பாளர் கூட்டம் ரத்து
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் இடையில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் இன்று (13) மாலை கூடவுள்ளதால், குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 341 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதால், கலந்துரையாடல் இடம்பெறும் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment