Header Ads



பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னாலும், ஏற்க மாட்டேன் -- மைத்திரி அடம்பிடிப்பு

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் நடக்காமைக்கு ரணிலும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது. தொடரும்.

பாராளுமன்றத்தை கலைப்பது பற்றி நான் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்கவில்லை. எனது சட்ட வல்லுனர்களிடமே கேட்டேன். பாராளுமன்ற கலைப்பு பற்றி மூன்று விதந்துரைகள் உள்ளன. நான்கரை வருடங்களுக்கு பின்னர் கலைக்கலாம் என்பது அதில் ஒன்று.

என்னுடன் வேலை செய்யக் கூடிய ஒருவரை தான் பிரதமராக நியமிக்க முடியும்.. சரத் பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னால் ஏற்பேனா ? இல்லை ஏற்கவே மாட்டேன்.. அப்படிதான் ரணிலையும் ஏற்க முடியாது..

- ஜனாதிபதி மைத்ரி வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் இலங்கை நிருபர்களிடம் தெரிவித்தார்...

Sivarajah-

No comments

Powered by Blogger.