Header Ads



மாலைத்தீவில் கதாநாயகியான சந்திரிக்கா - சீரோவான இலங்கை அமைச்சர்கள், நாமலுக்கு பின்வரிசை


மாலைத்தீவு ஜனாதிபதி யாமீனின் பதவியேற்கு நிகழ்வின்போது இலங்கையின் சட்டவிரோத வெளியுறவு அமைச்சர் சரத் அமுனுகம பங்கேற்றபோதும் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை அவர் அவமதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டின் தலைவர் என்ற அந்தஸ்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே அங்கு பிரசன்னமாகியிருந்ததாக கொழும்பு டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.

வழமையாக இவ்வாறான நிகழ்வுகளின்போது இலங்கையின் வெளியுறவு அமைச்சர்களான மங்கள சமரவீர போன்றோர் இந்திய உயரதிகாரிகளையும் இந்திய பிரதமரையும் சந்திப்பது வழக்கமான விடயமாக இருந்தது. எனினும் சரத் அமுனுகமவை எவரும் சந்திக்கவில்லை.

இந்தநிலையில் அவருடன் சென்றிருந்த அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கும் மாலைத்தீவின் புதிய அரசாங்கத்தினால் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


1 comment:

  1. Excellent.
    Shame on All illegal Ministers on SriLnaka.

    ReplyDelete

Powered by Blogger.