Header Ads



ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்து, சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்த்து நாட்டை அனர்த்தத்தில் இருந்து காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சகல பிரஜைகள், எதிர்கால சந்ததியினர் சார்பிலும் கௌரவமான முறையில் கோரிக்கை விடுப்பதாக சபாநாயகர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரை விமர்சித்து ஜனாதிபதி நேற்று அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியது என புரிந்து கொண்டுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகம், நாடாளுமன்ற சம்பிரதாயங்களை அவமதித்து, நிலையியல் கட்டளைச் சட்டங்ளை புறந்தள்ளி விட்டு, சபைக்கு நடுவில் வந்து செங்கோலை பறிக்க முயற்சித்ததுடன் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமான முறையில் நடந்து கொண்டனர்.

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது பெருத்தமற்றது செயல். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மோசமான செயற்பாடுகள் மூலம் நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய வாக்கெடுப்பை நடத்தப்படுவதை வேண்டும் என்றே தடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொளிகளை பார்த்தால் உங்களால் இதனை புரிந்து கொள்ள முடியும் எனவும் சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. பாராளமன்றங்களில் ஏற்படும் அடாவடிகளுக்கு மக்களே பொறுப்பு.
    காரணம் அடாவடித்தனமும் மனிதநேயமும் இல்லாத மாந்தைகளை யார் பாராளமன்றுக்கு அனுப்பியது. மக்களின் மோசமான நடவடிக்கையால் இறைவன் கெட்டதலைவர்களை அவர்களுக்கு சாட்டியுள்ளான் என்பதே நிதர்சனம்.

    ReplyDelete
  2. Honorable Speaker while writing letter Pleas don't right respectable Ministers.
    They don't deserve this/respectable words. Most of them are Culprits, Tough's, Thief's Criminal and Uneducated BUGGER'S....
    Sorry to say the TRUTH.

    ReplyDelete

Powered by Blogger.