ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி யூ.எல் அப்துல் மஜீத்க்கு சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம்
-ஜே .எம் வஸீர்-
ஓய்வு பெற்ற மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியூம், வக்பு நியாய சபையின் தலைவருமான யூ,எல் அப்துல் மஜீத் அவர்களுக்கு சட்டத் துறைக்கான கலாநிதிப் பட்டமானது பட்டப் பின் படிப்பு பட்டமளிப்பு விழாவின் போது கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கலாநிதி மஜீத் அவர்கள் சட்டத் துறைக்கு ஆற்றிய அளப்பெரிய பங்கிற்காகவே அவருக்கு இக் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவரால் எழுதப்பட்ட இலங்கை சிவில் நடைமுறைக் கோவை மற்றும் சிவில் சட்டம் ; P Civil Procedure Code and Civil Law ஆகிய புத்தகங்கள் இலங்கையில் மாத்திரமன்றி இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அமெரிக்கா பல்கலைக் கழகத்திலும் ((Stanford University)) பெரும் பாராட்டையும் அங்கீகாரத்தையும் அவருக்குச் பெற்றுக் கொடுத்த சிறந்த படைப்புகலாகும்.
மேலும் அவ்விரண்டு தொகுதிகளும் சிவில் சம்பந்தமான இலங்கை நீதி மன்றங்கள், வழக்கறிஞ்சர்கள், இலங்கை சட்டக் கல்லூரி உள்ளிட்ட ஏனைய சட்ட நிறுவனங்களிலும் அப்புத்தகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதிகார பூர்வ நூலாகவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன.
இது தவிர, கலாநிதி மஜீத் அவர்கள் Law of Delict (Tort) மற்றும் “Equity and the Law of Trusts” நூல்களையும் எழுதி உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், நூல்களாகிய ” Evidence Ordinance in Civil Actions” and “Some Aspects of the Common Law and Statute Law” என்ற நூல்களும்; எதிர்வரும் காலங்களில் அவரினால் வெளியிடப்படவுள்ளது.
இலங்கை நீதிபதிகளின் நிருவாகத்திற்கு “Manual on Family Law” என்ற நூல் எழுதப்பட்டுள்ளதுடன் சட்டத் துறை சம்பந்தமாக பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பத்திரிகைகளுக்கு இவரால் எழுதப்பட்டுள்ளது.
இவர் தற்பொழுது இலங்கை வக்பு நியாய சபையின் தலைவராகவும் கடமையாற்றி வருகிறார்.

Post a Comment