Header Ads



பொதுஜன பெரமுனவினால் ஆபத்து - ஜனாதிபதியிடம் முறைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் காமினி லொக்குகே, அரச நிறுவனங்களில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை அச்சுறுத்தி, கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஜனாதிபதியிடம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதியை நேற்று சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பியதாச, காமினி லொக்குகே, கட்சியின் தொழிற்சங்கங்களுக்கு கொடுத்து வரும் அழுத்தங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அப்படியில்லை என்றால், கட்சியின் தொழிற்சங்கங்கள் இல்லாமல் போகும் ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பல தொழிற்சங்கங்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொழிற்சங்கங்களையும் பெரமுனவில் இணையுமாறு பலவந்தப்படுத்தப்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொது செயலாளர், ஜனாதிபதியிடம் சாட்சியங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பலமான தொழிற்சங்கங்களாக இருந்து வந்த, இலங்கை துறைமுக அதிகார சபை, மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், உட்பட பல அரச நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளன.

இணைய மறுக்கும் தொழிற்சங்கங்களுக்கே காமினி லொக்குகே அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.