பாராளுமன்றத்தை குழப்ப இன்றும், சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவு தகவல்
பாராளுமன்ற கூட்டத்தை குழப்புவதற்கு இன்றும் (19) சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்ததாக சபாநாயகர் செயலகம் அறிவித்துள்ளது.
இதனால், பாராளுமன்றத்துக்குள் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் ஊடக அறிவித்தல் ஒன்றின் மூலம் சபாநாயகர் செயலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற படைக்கலச்சேவிதர், பாராளுமன்ற பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அறிவித்தல் வழங்கியதாக இன்று (19) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

OH! God Send this parliament inside EARTH with all CULPRITS politicians... Then no body is to blame..
ReplyDeletePlease GOD Save Srilanka from disasters..