Header Ads



ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிடுவோம் - முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தையும், ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அலரி மாளிகையில் இன்றைய தினம் -22- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி, அதிகாரம் என்ற போர்வையில் ஜனநாயகத்தை தொடர்ந்தும் மூடிமறைக்க முயற்சித்தால் எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதியின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை முற்றுகையிடுவோம்.

தொடர்ந்தும் ஜனநாயக விரோதமாக சர்வாதிகார அடிப்படையில் ஜனாதிபதி செயற்பட்டால், ஜனநாயகத்தை நேசிக்கும் பாரியளவிலான மக்கள் கூட்டமொன்றை கொண்டு வந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நாம் தயார் என முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.