Header Ads



கரு ஜயசூரியவிற்கு, மூன்றாண்டு சிறைத்தண்டனை

கரு ஜயசூரிய விரைவில் சிறைக்கு செல்ல உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கரு ஜயசூரியவிற்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். கரு ஜயசூரியவை நாம் இனி வரும் காலங்களில் சபாநாயகர் என அழைக்கப் போவதில்லை.

ஏனெனில் அவர் மிகவும் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டார். எனவே சபாநாயகர் என கரு ஜயசூரியவை இனி அழைக்க முடியாது.

அவரும் ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார். அண்மையில் வாய்மொழி மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என ஹன்சார்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

முன்னதாக இந்த ஆவணத்தில் இவ்வாறு இருக்கவில்லை, எனினும் பின்னர் ஆவணத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் போலி ஆவணங்களை தயாரித்த குற்றத்திற்காக கரு ஜயசூரியவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Joke பண்ணியதற்கே 3 வருடமெனில் நிஜமாக செய்தவற்றுக்கும் செய்பவைக்கும் ?

    ReplyDelete

Powered by Blogger.