Header Ads



காதி நீதிமன்றங்களில், கேட்ட அழுகுரல்கள்

-எம். ரிஸான் ஸெய்ன்-

கோரக் கரங்களால் கீறிக் கிழித்துடும் மனித மிருகங்களை காண வேண்டுமா...?

மனைவியுடனான முரண்பாட்டால் அவரதும் பிள்ளைகளதும் ஆடைகளையும் அணிகலன்களையும் தூக்கிச் சென்று பழிவாங்கும் மனிதாபிமானமற்ற மனிதர்களைப் பார்க்க வேண்டுமா...?

மனைவியோடுள்ள முறுகல் நிலையால் அவளை விட்டுவிட்டு, இத்தாவிலுள்ள ஒரு பெண்ணை தூக்கிச் சென்ற கடத்தல்காரனைக் காண வேண்டாமா..?

"எனது மகளை என்னிடமே திருப்பித் தாங்கோ" என்று கதறியழும் தாய்மார்களை சந்திக்க வேண்டுமா..?

உழைத்துப் பராமரிக்க வக்கில்லாத ஆண்மையற்ற ஜடங்களைப் பார்த்து கோபம் கொள்ள வேண்டுமா..?

குறுகிய காலம் உல்லாசம் அனுபவித்து விட்டு, தூக்கியெறிப்பட்ட புன்னகைக்க மறந்து போன அபலைகளைக் கண்டு கொஞ்சம் தேற்ற வேண்டும் போலுள்ளதா..?

தாயின் பேச்சை கேட்டுக் கொண்டு, மனைவியை உணர்வு பூர்வமாக அச்சுறுத்தி,( Emotional Blackmail) சித்திரவதை செய்யும் உணர்வற்ற கூட்டத்தை நேரில் சந்திக்க வேண்டுமா..?

"என்னை விட்டு விடவேண்டாம்" என்று கதறியழுது, காலில் விழுந்து மன்றாடும் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்கு ஏதாவது கூறத் தோன்றுகின்றதா..?

"நான் என்ன பிழை செய்தேன் என்று மட்டும் கூறுங்கள்" என்று நீதிக்காகப் போராடும் அநீதியிழைக்கப்பட்ட சகோதரிகளைப் பார்த்து ஒரு வார்த்தையேனும் கூற விரும்புகிறீர்களா..?

"இவரின் காசோ ,சொத்தோ ,பங்களாவோ, வசதியோ எதுவும் எனக்கு வேண்டாம். விடுதலையே வேண்டும்" என்று அடம்பிடிக்கும் சுதந்திரத் தாகத்திற்காக ஏங்கும் ஆயுள் சிறைகளில் வாழும் அடிமைப் பெண்களை காண வேண்டுமா..?

"பெண் பாவம் சும்மா விடாது. உங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறாங்க.அல்லாஹ் நிச்சயம் தண்டிப்பான்" என்று தன் மகளுக்காக சபித்து, அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டித் தவிக்கும் தந்தைகளைப் பார்க்க வேண்டுமா..?

அடிமைகளாய் நடாத்தப்படும் நவீன உலக ஜாஹிலிய்யத்தை உணர வேண்டுமா...?

"25 இலட்சம் திருமணத்திற்கு செலவளித்து விட்டோம். இவவ திரும்பக் கொடுக்க அதையெல்லாம் திருப்பிச் தரச் சொல்லுங்கோ" என்று மன்றாடும் தந்தைக்கு ஏதாவது கூற நினைக்கிறீர்களா..?

சந்தேக நோயால் கொடுமைப்படுத்தும் கணவனிடமிருந்து விடுதலைப் பெறத் துடிக்கும் இளம் மனைவியின் கண்ணீரைத் துடைக்க கை நீளுகிறதா..?

"அவன விட்டு விடு. அவனோடு வாழ முடியாது" என்று தன் மகளை வற்புறுத்தும் தந்தையின் இரும்புக் கரத்தில் சிக்குண்ட மகள்களைக் காண வேண்டுமா...?

அப்படியெனில் 
தலாக் ( விவாகரத்து) மொத்த வியாபாரமாக நடக்கும்
காதி நீதிமன்றங்களுக்கு செல்லுங்கள்.

#ஒருநாள்_அமர்வின்_நாட்குறிப்பு

8 comments:

  1. Very true. Also you should let the people know about the bad qadis who work for money.

    ReplyDelete
  2. Very very true that's whay muslim marriage law should be changed

    ReplyDelete
  3. my Dear Brother/Sister those who reading just this article feels sad. I had been seeing many sad story from Colombo Khazi court also met many young Guys and Girl.90% they problem just for small small incidents can solve very easily .but No compromise,No Understands.specially Colombo poor Muslims family mentality is a Boy completed his 10th. Parents next choice is Pettah Bazar for work/ if a Girl complete her 10th or O/L their think she eligible for wedding life. My house and Colombo Khazi court just 05 minute distance.everyday morning when I go to work i can see at least 10 young girls as pregnancy.new married.on the spot I will ask a Dua in my mind for them not to get divorce each other. not onl me my non muslim friends(Girls-Boys) also feel very sad of them. I still have remember one of my friend mom (Non Muslim) said that Islam religion is peaceful and very easy to understand of life. but most of peoples making complicated for them selves for nothing.

    ReplyDelete
  4. கவலையாக இருக்கிறது. இதானால்தான் பல முஸ்லிம் நாடுகள் மரபுச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. ஒவ்வொரு சட்டபிரிவும் மாற்றப்படுகிறபோது அந்த அந்த சட்டபிரிவில் முஸ்லிம் நாடுகள் பெண்களின் பாதுகாப்பை உச்சபடுத்தும் நோக்கில் கொண்டுவந்திருக்கிற உச்ச பட்ச்ச மாற்றங்கள் கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். மாற்று மதத்தவர்களை மதம் மாற்றி இரண்டாவது மனைவியாக விசேட சட்டங்களின் கீழ் திருமணம் செய்வது வளரும் இனமுரண்களின் அடிபடைகளில் ஒன்றாக இருக்கிறது. நான் பேசிய பல சிங்களவர்கள் இப்ப அச்சுறுத்தப்பட்டதால் சிங்கள பெண்களை இலங்கையில் வைத்து மதம் மாற்றி திருமணம் செய்வது குறைந்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் அரபு நாடுகளுக்கு அனுப்பி மதம் மாற்றுவது திருமணம் செய்வதையும் அனுமதிக்க போவதில்லையென கூறினார்கள். தமிழர்கள் குறிப்பாக கிழக்கில் மிகவும் கொதிப்பாக பேசினார்கள். தமிழரை புத்த அடிபடை வாதிகள் பக்கம் தள்ளும் முதன்மைக் கலாச்சார காரணிகளாக இத்தகைய திருமணங்களே உள்ளது. சிங்களவர் மத்தியில் வாதியும் பிரதிவாதியும் ஏற்றுகொள்ளாத விடயங்களை காதிகோட் விசாரிக்கக்கூடாது என்கிற கருத்துள்ளது. தமிழர் மத்தியில் தங்களை பாதிக்கும் மதம் மாறி விசேட சட்டங்களின் கீழ் திருமணம் செய்வது தொடர்பாக மட்டும் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. மற்றப்படி தமிழர்கள் முஸ்லிம் சிறப்புச் சாடம்பற்றி பெரிதாகக் கவலைப் படவில்லை. ஆன்னால் கடைகளில்
    வேலை செய்யும் பெண்களை இஸ்லாமிய ஆடை அணிய வைப்பது மதம்மாற்ற கேட்பதுபோன்ற கலாச்சார தாக்குதல்கள் அதிகரிப்பதாக கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் சொல்லப்பட்டது.இத்தகைய எந்தக் குறச் சாட்டுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக வடமாணத்தில் யாரும் சொல்லவில்லை.
    .
    முஸ்லிம்கள் விசேட சட்டப்ங்க்ளுக்கு அவசியமான சீர்திருத்தங்களை ஏற்கொள்வதன் மூலம் மட்டுமே நீண்டகால அடிப்படையில் விசேட சட்டங்களை பாதுகாக்க முடியும் என்பத

    ReplyDelete
  5. there is no better law than Islamic marriage law, problem here is marriage is not happening in Islamic way.

    Need to make some restriction, if you not married in Islamic way for divorce you can't use Islamic law.

    The way we practice the law should be changed.

    ReplyDelete
  6. Bro. Hilmy is making complete sense. Our society is kept in dark about all these matters. If more people are aware of these things, there will be more social pressure on the Qazi Judges to be more Just and reasonable and the couples to be more averse in going down the path of divorce. Meaningful changes to the MMDA also may gain some traction if plight of such people become common knowledge.

    ReplyDelete

Powered by Blogger.