சபாநாயகருடன் வந்த பொலிஸார் மீது தாக்குதல் - குழப்பங்கள் நிகழ்ந்தபோது, சிரித்தபடி வேடிக்கை பார்த்த மகிந்த
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டாவது தடவையாகவும் இன்று நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
காவல்துறை பாதுகாப்புடன் வந்த சபாநாயகர் மீது தாக்குதல்
காவல்துறையினரின் பாதுகாப்புடன் சபாநாயகர் அவைக்கு வந்த போது ஆளும்கட்சியினர் காவல்துறையினர் மீதும், சபாநாயகர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
மகிந்த அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை அகற்றிக் கொண்டு சென்றதுடன், அவரது மேசையில் இருந்த ஆவணஙங்கள் மற்றும் பொருட்களால், காவல்துறையினர் மீதும், சபாநாயகர் மீதும் தூக்கி வீசினர்.
இந்த நிலையில், சபாநாயகர் ஆசனத்தில் அமராமல், சபை அமர்வை கூட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நிலையியல் கட்டளைகளை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்தார்.
அதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவு அளித்தனர். இதையடுத்து, பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அவை 19ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
பெருமளவு காவல்துறையினரின் பாதுகாப்புடன் உள்ளே வந்த சபாநாயகர் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளார்.
இந்தக் குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, மகிந்த ராஜபக்ச சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

வேடிக்கை பார்ப்பது புதிதல்ல. .. அளுத்கமை சம்பவத்தின் போது இதைத்தானே செய்தார்.
ReplyDeleteippo kutthi uttu kummaalam adikkum mahinda....ippudi oru aatchi unakku wenuma??? unnala mattunthaana intha naatta aalamudiyum? nee mattumthaan puttysaali mattawanga ellarume mokkaya??? wedikkayya iriki unga wilayaattu"""general election waara neram face pannunga ayya..ippo widunga...ungaluku darmam kidaykkum...ithu pakka saarfa solla illa..
ReplyDelete