ரணிலை தனியாக சந்திக்க, மைத்திரி மறுப்பு
தனியாக சந்தித்து பேச வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், எதுவாக இருந்தாலும், அதனை அனைத்து கட்சி கூட்டத்தில் பேசு வருமாறு முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து கட்சிகளின் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள நிலையில், இன்று இரவு ரணில் - மைத்திரி ஆகிய இருவரும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை ஜனாதிபதி மைத்திரிபால நிராகரித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு தரப்போவதில்லை என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிருந்து ரணிலை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment