ஒரு கண் சாடையினால், பாராளுமன்ற வன்முறையை மகிந்த நிறுத்தியிருக்கலாம் - அனுரகுமார
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்தனை அசம்பாவிதங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சபையில் அசாதாரணமான முறையில் செயற்பட்ட அத்தனை பேரும் மஹிந்த ராஜபக்ஷவை கண் எட்டிய தூரத்தில் கண்டாலும் தலைவணங்குபவர்கள்.
சபையில் அத்தனை அசம்பாவிதங்களும் நடைபெறும் போது மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக நின்று அவதானித்துக் கொண்டுதான் இருந்தார்.
சிலபோது அவர் கைகளினாலோ அல்லது கண் சாடையாகவோ நிறுத்துமாறு சைகையொன்றை வழங்கியிருந்தால் பிரச்சினை உடன் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.
ஆனால், அவர் அப்படி எதனையும் செய்யும் விருப்பத்துடன் இருக்கவில்லை. தொடர்ந்தும் இந்த வன்முறையை முன்னெடுப்பதற்கான உட்சாகத்தை வழங்கிக் கொண்டே சபையில் வீற்றிருந்தார்.
இதனால், சபையில் ஏற்பட்ட அத்தனை அசாதாரண நிகழ்வுகளுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Post a Comment