Header Ads



மைத்திரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய, ஜனாதிபதி தெரிவுசெய்ய பேராசிரியர்கள் அழைப்பு விடுப்பு

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயற்பட்டு வரும் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை கொண்டு வர வேண்டும் என ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு வாக்களித்த 62 லட்சம் மக்களை மட்டுமல்லது, ஜனாதிபதி செயற்பாடுகள் தொடர்பாக வெறுப்படைந்துள்ள சகல மக்களுக்கு இதற்காக அழைப்பு விடுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜனநாயகத்திற்கான பல்கலைக்கழக பேராசிரியர்கள் ராஜகிரியாவில் உள்ள நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கியதுடன் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது விருப்பதத்திற்கு ரணில் விக்ரமசிங்கவை நியமித்தது போல், மகிந்த ராஜபக்சவை நியமித்ததாக ஜனாதிபதி கூறினார்.

அப்போது ஜனாதிபதி 18 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மாற்றப்பட்டு, 19வது திருத்தச் சட்டம் பெப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது ஜனாதிபதிக்கு நினைவில் இல்லையா என நாங்கள் கேட்கிறோம்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்றிய ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இது இரண்டாம் வகுப்பில் படிக்கும் பிள்ளைக்கும் புரியும். இவ்வாறான நிலையிலேயே ஒக்டோபர் 26 ஆம் திகதி வெள்ளிக் கிழமையில் இருந்து தொடர்ந்தும் சட்டத்திற்கு விரோதமாக செயற்பட்டு வருகின்றனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள முதல் பந்தியை நீக்கி விட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றும் தேவை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படும் அரசியல் குற்றப் பிரேரணைக்கு இது காரணமாக அமைந்து விடும் என்ற காரணத்தினால், அதனை நீக்குமாறு கூறுகிறார்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயற்படும் ஜனாதிபதிக்கு எதிராக மக்களின் அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை ஒன்றை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

62 லட்சம் மக்கள் அவருக்கு வழங்கிய வாக்குகளை செல்லுப்படியற்றதாக்க வேண்டும். புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய நாம் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேராசிரியர் சந்திரகுப்த தெனுவர குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. மிகவும் பொருத்தமான காலத்துக்கு அவசியமான தீர்மானம். மிகவும் தீர்க்கமான திட்டமிட்டு இதனைச் செயற்படுத்த வேண்டும் நிச்சியம் 62 இலட்சம் மக்களையும் நெருக்கடிநிலைக்கு கொண்டு சென்ற இந்த சனாதிபதி ஒரு நிமிடமும் பதவியில் இருக்க இந்த நாட்டு மக்கள் அனுமதியளிக்கக்கூடாது.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் உள்ள,நாட்டையும்
    மக்ளையும் நேசிக்கின்ற நாட்டுப்பற்றாளர்ளை
    சிந்திக்க தூண்டும் சிறந்த கருத்துக்கள்

    ReplyDelete
  3. WE ARE WAITING FOR THIS GOLDEN TIME. WE WILL HOLD THE HANDS OF PROFESSOR'S..
    Please go ahead...
    All The Very BEST.
    We love peaceful SriLanka.

    ReplyDelete
  4. It is the time for all intellectuals to join hands to get our mother land freed from the thuggery rulers for the betterment for our future generation. The current rulers can't understand the constitution and they are trying to rule with their own interpretation.

    ReplyDelete
  5. சரியான தீர்வு இதுவாகத்தான் இருக்கும் இதனை உடனடியாக அமுல் படுத்தப் பட வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.