பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
நாடாளுமன்றம் இன்று (16) பிற்பகல் 1.30 மணியளவில் கூடவுள்ளதால், நாடாளுமன்றத்திலும் அதனை சூழவுள்ள பிரதேசத்திலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற்றக்கூடாதென்ற காரணத்தையொட்டி, முன்னெச்சரிக்கையில் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களைக் கருதிற் கொண்டு, சபாநாயகரின் வேண்டுகோளுக்கமைய, இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment