இலங்கை வான்பரப்பில், இன்று 6.40 க்கு தென்படவுள்ள ஏற்படவுள்ள நிகழ்வு
சர்வதேச விண்வௌி மையம் இன்று -18- மாலை இலங்கை வான்பரப்பில் பயணிக்கவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி , இன்று மாலை 6.40 மணி தொடக்கம் 4 நிமிடங்கள் ஐ.எஸ்.எஸ் எனப்படும் சர்வதேச விண்வௌி மையம் இலங்கை வான்பரப்பில் பயணிக்கவுள்ளது.
மேகமூட்டம் இல்லாவிடின் இலங்கையர்கள் அதனை வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.
விமானம் அல்லது மிகவும் பிரகாசமான நட்சத்திரம் ஒன்று நகருவது போன்று சர்வதேச விண்வௌி மையத்தை அவதானிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சாதாரணமாக விமானம் ஒன்று மணித்தியாலத்துக்கு 965 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்பதுடன், சர்வதேச விண்வௌி மையம் மணித்தியாலத்துக்கு 28,000 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்று நாசா விண்வௌி ஆய்வு மையம் கூறியுள்ளது.

WhatsApp share vainga
ReplyDelete