Header Ads



கஜா புயலினால் இலங்கைக்கு 30 லட்சம் ரூபாய் மேலதிக வருமானம்

இலங்கையின் வான்பரப்பில் வழமை விடவும் அதிகளவான விமானங்கள் பறந்துள்ளதாக துறைசார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய கஜா சூறாவளி காரணமாக, அதிகளவான விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பறந்துள்ளன.

இதன் காரணமாக இலங்கைகக்கு 30 லட்சம் ரூபாய் மேலதிக வருமானம் ஈட்டமுடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் காலை நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் இலங்கயின் வான்பரப்பின் ஊடாக 200 சர்வதேச விமானங்கள் பயணித்துள்ளது.

அன்றைய வருமானம் 80 லட்சம் ரூபாய் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பொதுவான நாட்களை விடவும் புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்ட நாட்களில் விமான பயணங்களின் அதிகரிப்பை காண முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொதுவான நாட்களில் இலங்கை விமான எல்லையில் 120 விமானங்கள் பயணிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.