Header Ads



புத்தளத்தில் 50 ஆவது நாளாக, தொடரும் போராட்டம் (படங்கள்)


- இர்ஷாத்  றஹ்மத்துல்லா -

 புத்தளம் அறுவக்காடு பிரதேசத்திற்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்படவுள்ள குப்பைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று -17- சனிக்கிழமை  50 வது நாளாக புத்தளத்தில் மறியல் போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

புத்தளம் மணல்குன்று பிரதேச புகையிரத பாதையினை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட மேற்படி சாலை மறியல் போராட்டத்தினால் அறுவக்காட்டிலிருந்து பாலாவி சீமெந்து ஆலைக்கு புகையிரதத்தில் கொண்டுவரப்படும் சுண்ணாம்புக்கற்கள் தற்காலிக இடை நிறுத்தப்பட்ருந்தன.

தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீமெந்து தொழிற்சாலை அதிகாரிகளுக்கு அழைப்புவிடுத்த போதும்,எதிர்வரும் 27 ஆம் திகதி இந்த பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள தமது நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக புத்தளம் பொலீஸாரின் ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதும்,இதற்கு இவர்கள் உடன்பாடு தெரிவிக்காத நிலையில் புத்தளம் நீதிமன்றின் உத்தரவினை பொலீஸார் பெற்று இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முடிவினை கொண்டுவந்தனர்.

புத்தளம் அறுவக்காட்டில் சீமெந்து தொழிற்சாலையினால் அகழப்படும் சுண்ணாம்புக்கற்களினால் பாரிய குழிகள் காணப்படுவதாகவும்,இதன இந்த குப்பைகளை கொண்டு வந்து நிரப்புவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சியினை தாங்கள் கண்டிப்பதாகவும்,இதன் மூலம் சூழலும்,மக்களும் பெரும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வடமேல் மாகாண சபை முன்னளாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிபாஸ்  அகமட் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டிருந்தனர்.


No comments

Powered by Blogger.