Header Ads



4 மாத அரசசெலவு கணக்குக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இடமளிக்கப் போவதில்லையென்கிறது ஐ.தே.க.

அடுத்த வருடத்தின் முதல் 4 மாத காலத்துக்கான அரச செலவுகளை ஈடுசெய்யும் வகையிலான இடைக்கால கணக்கு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான சட்ட மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதனை எதிர்க் கொள்வதற்கான நடவடிக்கைகள் என்பன அடங்கிய அறிக்கையொன்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தம்மிடமே இருப்பதாக கூறும் ஐக்கிய தேசிய முன்னணி எந்தவொரு பிரேரணையையும் நிறைவேற்ற இடமளிக்கப் போவதில்லையென தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.