113 ஐ நிரூபிக்கின்றோம் நேரம் தாருங்கள் எனக்கேட்டும், வெட்கமில்லாத ஜனாதிபதி நேரம் தரவில்லை
வெட்கமில்லாத ஜனாதிபதி மற்றும் போலி பிரதமர் ராஜபக்ச ஆகியோர் மேற்கொள்ளும்மசமான சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக 100 மீற்றர் அல்ல மரத்தன் போட்டியாக கருதி செயற்பட வேண்டியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனால், இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் நிலைப்பாடுகளை கட்டியெழுப்பவும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பை வெளியிடும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
எமக்கு ஆதரவளிக்கும் கட்சிகள், அமைப்புகள் மற்றும் கட்சிசாரதவர்கள் இணைந்து தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.
அதற் பலன் கிடைக்கவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
நாளை மாலை 3 மணிக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் நடக்கும் இந்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
அத்துடன் சர்வக்கட்சி மாநாட்டின் போது ஜனாதிபதி முன்னிலையில் விமல் வீரவங்ச, 113 உறுப்பினர்களில் ஆதரவு இருந்தால், காட்டுங்கள் என்று எமக்கு சவால் ஒன்றை விடுத்தார்.
கண் பார்வையில் குறையில்லை என்றால், நாடாளுமன்றத்தில் எமக்கு இருக்கும் ஆதரவை காணமுடியும்.
வேண்டும் என்றே மறுபக்கம் திரும்பிக்கொள்ளும் நபருக்கு அதனை காண்பிக்க முடியாது. உடனடியாகவே நாங்கள் அந்த சவாலை ஏற்பதாக ஜனாதிபதியிடம் கூறினோம்.
113 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவரது அலுவலகத்திற்கு அழைத்து வந்து பெரும்பான்மை நிரூபிக்கின்றோம் எமக்கு நேரம் ஒன்றை தாருங்கள் என்று கேட்டோம்.
எனினும் ஜனாதிபதி எமக்கு நேரத்தை வழங்கவில்லை. ஜனாதிபதி விழுந்துள்ள மீள முடியாத அரசியல் பொறிக்குள் அவரால், எமக்கு நேரத்தை ஒதுக்கி தருவார் என்று நினைக்கவில்லை எனவும் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No U turn and
ReplyDeletealso does not no right turn ... but
only he knows wrong turn...