Header Ads



விஜயகலாவின் புலி ஆதரவுக்கு, சம்பந்தன் கண்டனம்

புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தமிழ் – சிங்கள மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயகலா தெரிவித்துள்ள கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்று அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே பழையவற்றை மீண்டும் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. இந்தியாவில் காஸ்மீர்,பஞ்சாப் மாநிலங்களில் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதற்காக அங்கு அரசே போதைவஸ்து,தாராளமான மது விற்பனை நிலையங்கள்,விபச்சாரம்,ஆயுத கலாச்சாரம் கொலை கொள்ளை போன்றனவற்றினை அரசே முன்னின்று (உளவு அமைப்புகள்)செய்வித்து மக்களின் சிந்தனையை திசை திருப்பும் வேலையை செய்கிறார்கள் இது தான் இலங்கையிலும் நடைபெறுகிறது இதே மாதிரியான நடவடிக்கைகள் தான் அமெரிக்காவை ஒரு நாடாக இனைத்து வைத்துள்ளது மக்களின் விழிப்புணர்வை அறிந்து தான் செளதி அரேபியாவும் மெதுவான மாற்றங்களை தொடங்கியுள்ளார்கள் இவ்வளவு பெரிய ஆயுத போராட்டத்தை ஒரு முடிவிற்குள் கொண்டுவந்தவர்களால் சிறு கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியனவற்றினை கட்டுப்படுத்தும் வல்லமை இல்லாதென்பது நாடகமே இக் குற்ற செயல்கள் யாவும் அரச
    நாடகம்

    ReplyDelete
  2. தமிழ் மக்களின் உணர்வை வெளிப்படுத்திய விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் கருத்தை கொச்சைப்படுத்திய சம்மந்தன் ஐயா உள்வீட்டுக்குள்ளே காட்டிக்குடுக்கவும் கூட்டிக்கொடுக்கவும் ஆட்கள் உள்ளனர்.

    ReplyDelete
  3. Good point சம்பந்தன் ஐயா

    பணம்-பதவிகள் பெறுவதற்காக நாக்கு தொங்க சிங்கள கட்சிகளின் காலை பிடித்து திரியும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், விஜயகலாவிற்கும் என்ன வித்தியாசம்?

    ReplyDelete
  4. Sampanthan aiyya ean ippedi irukkurial ? Mudiya vittal mounamaha irikkalame

    ReplyDelete
  5. @Meera, சம்பந்தன் ஐயா சொன்ன கருத்து 100% சரி.

    தவிர, இதெல்லாம் சிங்கள-முஸ்லிம் இனவாதிகளின் வாயை அடைப்பதற்கான ரணில் தந்திரம். விஜயகலாவை விட்டால் UNP க்கு வடக்கில் ஒருவரும் இல்லை, தெரியுமோ?

    ReplyDelete
  6. பதவி வெறி பிடித்த சம்பந்தன், விஜயகலாவை குற்றம் பிடிக்கிறார்.

    அப்படிக் கண்டித்தால் மாத்திரம்தான், எதிர்க்க கட்சி தலைவராக நீடிக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.