Header Ads



நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள் - மரண தண்டனை நிறைவேற்றுவதை கைவிடுங்கள்

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் தனது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்,விதிக்கப்பட்ட மரணதண்டனைகளை மாற்றவேண்டும்,மரணதண்டனையை ஒழிப்பதற்கான ஆரம்பநடவடிக்கையாக அதற்கு உத்தியோகபூர்வ தடைiயை விதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் தினுசிகா திசநாயக்க தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தின் வேறு பல நாடுகள் ஈவிரக்கமற்ற இந்த நடைமுறையை பின்பற்றியவேளை இதனை கைவிட்டதன் மூலம் இலங்கை முன்மாதிரியாக விளங்கியதுடன் தலைமைத்துவம் வகித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல உலகநாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள தருணத்தில் இலங்கை பிழையான திசையில் பயணிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரமான இந்த நடைமுறையை பின்பற்றும் சிறிய எண்ணிக்கையிலான நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைந்து கொள்ள முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. மேடம் தினுசுகா திசநாயக்கா அவர்களே நீங்கள் தற்போது இலங்கை நாட்டில் வாழ்கின்றீர்களா அல்லது இலங்கை இளம் வாழிபசிருவர்களுக்கு போதைபொருட்கள் எவ்வாறு சென்றடைகின்றது என்ற உண்மையை தெரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமில்லையா? ஏன் உங்கள் குடும்பத்தில் இந்த போதை பொருட்களை விற்பவர்களால் யாரும் பாதிக்கபடவில்லையோ?

    ReplyDelete
  2. சர்வ தேசத்தாரையும் படைத்தவனின் கட்டளைக்குக் களங்கம் ஏற்படுத்துவதா அல்லது சர்வதேச மன்னிப்புக் சபைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதா  என்பதை தேசத் தலைவர் தீர்மானிப்பார் விரைவில்!

    ReplyDelete
  3. அம்னஸ்டி இன்டர்நெசனலுக்கு ஒரு கண்டிப்பான உறுதியான ஒரு வேண்டுகோள். இந்த நாட்டு மக்களைத் திருத்தும் நல்ல நோக்கில் சனாதிபதியும் பாராளுமன்றமும் நிறைவேற்றும் முடிவுகளுக்கு தேவையில்லாத நடைமுறைச் சாத்தியமற்ற வேண்டுகோள் விடுக்க வேண்டாம்.

    ReplyDelete
  4. Tyri g to prorwct the Drug mafia under the cover of human rights.

    This officials are working for Drug mafia in different ways. They do not care the 1000s of our youths destroying their life by this drugs. she is acting like the same.e way when UN tried to protect the Drug dealers of Philippine.

    sham on everyone who the to protect wrong doors and mafia but neglecting the death of our youths by this drugs.

    I wish our president will act like Duttertte the Phillipine president in this issue.Also arrest whoever trying to protect this drug mafia.

    ReplyDelete
  5. If people repent for their wrong doings he can pardon them. If they are repeating the same mistake again and again, they should face the consequences.

    ReplyDelete
  6. மேடம் தினுஸ்கா திசநாயக்கா அவர்களே இலங்கை நாட்டுக்கும் அதில்வாழும் மக்களுக்கும் எதில் நற்பெயரும் கண்ணியமும் உள்ளது *போதை பொருட்களை உற்பத்தி செய்து,அல்லது அதை வெளிநாடிலுருந்து கடத்திவந்து நம் இலங்கையில் வாழும் மக்களை அந்த போதைப் பொருட்களுக்கு குறிப்பாக இளம் சிருவர்களயும்,வாழிபர்களையும் அடிமையாக்கியதால் நம் சமூகத்தில் கொலை,கொள்ளை,சிருவர்துஷ்பிரயோகம் போன்ற பல தீமைகள் இந்த போதை பாவனையாளர்களால் நிகழ்கின்றன இதட்கெல்லாம் மூலகாரணம் இந்த போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் என்று மக்கள் தீர்பு கொடுத்துள்ளார்கள் ஜனாதிபதி இவர்களை இந்த நம் இலங்கை பூமியிலிருந்து இவ்வாறு நாசகாரியம் செய்பவர்களை இல்லாமல் ஆக்கி நம் நாட்டு சமுதாயத்தை பாதுகாப்பது நற்பெயரா அல்லது இந்த போதவிற்பனையாளர்கள கண்டுகொள்ளமல் அவர்களால் சமுதாயம் எவ்வாறு சீர்கெட்டாலும் நமக்கென்ன நஸ்டமென்று வாழ்ந்துகொண்டிருப்பது இலங்கை மக்களுக்கு நற்பெயரா எது சரி!? நீங்கள் மனிதை உரமைகள் பற்றி படித்து வைத்துள்ளீர் ஒருவனை கொலை செய்வது பாவம்மென்றால் இந்த போதைக்கு அடமையாகியவனால் எத்தனை என்னற்ற கொலைகள், ஏனைய பாவச்செயல்கள் நிகழ்கின்றன ஏன் தன்வாப்பா உம்மாவை கூட போதைக்கு பணம் கேட்டு அடித்து கொள்கின்றார்கள்! ஏன் மேடம் கொழும்பில் விடுதலை புளிகளால் வைக்கப்பட்ட அனைத்து பொம்பின் கொலைகளுக்கும் பிரபாகரனுக்குத்தான் மரணதண்டனை விதித்தீர்கள் அந்த பொம்பை அவ்விடத்தில் வெடிக்கவைத்தவர் பிரபாகரனா இல்லை? அவர் அகற்கு மூலகாரணம் அவ்வாறே போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் செய்யும் ஒவ்வொரு குற்றத்திட்கும் மூலகாரணம் இந்த போதைப்பொருட்களை வினியோகிக்கும்,விற்பனைசெய்யும் நாசகார சக்திகளே என்று நன்றாக சிந்திக்க தெரிந்துகொள்ளுங்கள் இவர்களை அழித்துவிடவதில்தான் இலங்கையின் நற்பெயர் இலங்கை மக்களிடம் உண்டாகும் அவர்களை இந்த தீயசெயல்களை நம் நாட்டுக்குள் செய்யவிட்டு விட்டு ஏனய நாட்டவர்களின் கண்ணியத்தை தேடவேண்டிய நிலைமை எங்களுக்கு கட்டாயமில்லை!*

    ReplyDelete
  7. Amnesty international also Yahoodi.

    ReplyDelete

Powered by Blogger.