Header Ads



முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு, தலைமை உருவாக்கப்படவுள்ளதாக அறிவிப்பு


தேசிய முஸ்லிம் தலைமைத்துவ சபை என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்துக்கான புதியதொரு தலைமை உருவாக்கப்படவுள்ளதாக சித்தி லெப்பே ஆய்வு மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார். சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகம் அதன் உள்ளக தலைமைத்துவப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்திருக்கிறது. அந்த இடத்தை நிரப்புவதற்கே இந்தத் தலைமைத்துவச் சபை உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தேசிய சூறா கவுன்சில், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்கள் இருந்தாலும்,  இந்தச் சபை அவற்றுடன் இணையாது தனியாகச் செயற்படும் என சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் தலைவர்  மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் தேசியமும் சகவாழ்வும் என்ற தொனிப்பொருளில் சித்தி லெப்பை ஆய்வு மன்றம் தனது முதலாவது தேசிய ஆய்வு மாநாட்டை நடத்தவிருக்கிறது.  எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி இந்த ஆய்வு மன்றம் கொழும்பில் நடைபெறும். இந்த ஆய்வு மாநாட்டின் போதே தேசிய முஸ்லிம் தலைமைத்துவ சபை பிரகடனம் செய்யப்படவுள்ளது.

தேசிய முஸ்லிம் தலைமைத்துவப் பேரவை நாடு முழுவதுமுள்ள 25 மாவட்டங்களிலும் இருந்து பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும். 09 மாகாணங்களிலும் இருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை வைத்து சுப்ரீம் கவுன்சில் உருவாக்கப்படும். இது இயக்கங்களையோ கட்சிகளையோ சாராது செயற்படும். சித்தி லெப்பை ஆய்வு மன்றம் இந்தத் தலைமைத்துவ சபை உருவாக்கத்துக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயற்படும் எனவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட

14 comments:

  1. your 1st declaration itself saying not united. how can Allah can put
    barakath in your efforts . think to units everyone

    ReplyDelete
  2. இது அவசியம்தானா? உங்களுக்கு பதவி வேண்டும் என்றால் எத்தனையோ வழிகள் இருக்க ஏன் முஸ்லிம் சமூகத்தை இன்னும் இன்னும் கூறுபோட நினைக்கின்றீர்கள்? இருக்கின்ற சபைகளை வலுப்படுத்துவதை விட்டு விட்டு தயவு செய்து உங்கள் சொந்த அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக தேசியம் என்ற பெயரில் சமூகத்தை விற்கவேண்டாம்

    ReplyDelete
  3. Too many leaderships in the community already causing confusion. Another adding to the mess?

    ReplyDelete
  4. பத்தோடு பதினொன்று ஆகாமல் விட்டால் சரிதான்.

    ReplyDelete
  5. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
    (அல்குர்ஆன் : 33:21)
    www.tamililquran.com

    ReplyDelete
  6. நல்ல நோக்கத்தோடு ஆரம்பிப்பார்கள். கொஞ்சம் காலம் செல்ல சாக்கடை அரசியல் முனாபிக்குகளுடன் கைகோர்த்துக் கொள்வார்கள். இதுதான் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தொடரும் சாபக்கேடு.

    ReplyDelete
  7. Cant keep the basic sunna beard... and they are going to talk about muslim. First check whether they are fasting these days

    ReplyDelete
  8. May allah guide this people.
    They have not understand our present situation.

    ReplyDelete
  9. நல்ல தொரு ஆரம்பமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. What will this council do? is it for vision of Ramzan moon?

    ReplyDelete
  11. Every one starting group.
    We cannot be unity with each others.
    Without unity what we going to achive??????

    ReplyDelete
  12. இருக்கும் நூறோடு, நூற்றியொண்டாகவே இருக்குமே தவிர, உங்களுக்கெல்லாம் விழும் சிங்களவர்களின் அடிகளை நசுக்கள்களை எதிர்த்து போராடும் முதுகெழும்புள்ள இயக்கங்க்களாக இருக்க முடியாது.

    ReplyDelete
  13. Excellent idea. You should also call the Malays to join.

    ReplyDelete
  14. Hello my friend. We have well enough groups.we don't need anymore groups. If you are getting some money to operate spend it poor people & get photograph & publish

    ReplyDelete

Powered by Blogger.