Header Ads



தனி அரசாங்கம் அமைக்க தயார் - ஹரின்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை அமைக்க தமது தரப்பு தயாராகி வருவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்பதுடன் அதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கூட்டு எதிர்க்கட்சி, பிரதமருக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் செயற்பட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து, ஏனைய சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என அந்த கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்மசிங்க, தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனி குழுக்களாக அழைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கத்தின் எதிர்காலம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களையும், யோசனைகளையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. இனவாதமும், இனவாதக் கட்சிகளின் இணைவுகளும் இல்லாத தூய ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ், முஸ்லிம்  கட்சிகளும் இணைந்த ஓர் கூட்டணியை ஒன்றிணைக்க முடியுமாக இருந்தால் அதுவே இந்நாட்டின் விடிவுக்கான வழியாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.