Header Ads"இஸ்லாத்தை எத்திவைக்காமையே, இலங்கையில் இனவாத தாக்குதலுக்கு மூலகாரணம்"

-Abu Bakr-

கடந்த சில வருடங்களாக, குறிப்பாக தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சனையிலிருந்து, தற்போதைய பிரச்சனை வரை இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இலங்கையில் நடக்கின்ற பிரச்சனையை இஸ்லாத்தின் பார்வையில் ஆராய்ந்து பார்த்தால், இதற்கு முக்கிய காரணமாக முஸ்லிம்கள் இஸ்லாத்தை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமை என்பதனையே தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

பல இஸ்லாமிய அறிஞர்களும், சிந்தனைவாதிகளும் இதன் தேவையை காலா காலமாக எத்திவைத்திருந்த போதிலும், இஸ்லாமிய அமைப்புக்களும், இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம்களும் தங்களுக்குள்ளேயே தங்களது விபகாரங்களை நேர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று யோசித்ததல்லாமல், இஸ்லாத்தை மற்ற மக்களுக்கு மத்தியில் ஒழுங்கு படுத்தபட்ட முறையில் (சிஸ்டமடிகளி), திட்டமிட்ட அடிப்படையில் (ஓர்கனைஸ்ட்), உரிய திட்டங்களை வகுத்து (பிலான்) கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர்கள் செய்யவில்லை என்பது ஒரு உண்மை. இதன் விளைவைத்தான் இன்று நாங்கள் சுவைத்துக்கொண்டிருக்கின்றோம் என்றால் அது மிகையாகாது.

1970களில் இலங்கையைச் சேர்ந்த சில அறிஞர்கள் மௌலானா மௌதூதியை பாக்கிஸ்தானில் சந்தித்த போது, அவர் கொடுத்த மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், 'இலங்கையில் உங்களது இஸ்லாமியப் பணி முற்றிலும் பௌத்த மக்களுக்கு இஸ்லாத்தை எத்திவைக்கும் பணியாகத்தான் இருக்க வேண்டும்' என்றாலும் அவரது அந்த ஆலோசனை எந்தவகையிலும் எடுக்கப்படவில்லை, மாறாக அவரது சிந்தனையில் வந்த இயக்கங்கள் கூட, அவரது புத்தகங்களையும் சிந்தனைகளையும் தாங்கி வந்த இயக்கங்கள் மற்றும் அதனோடு சார்பாக உள்ள மற்ற அனைத்து இயக்கங்களும், முஸ்லிம்களுக்குள்ளேயே அவர்களது முழு சக்திகளையும் செலவளித்தார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம், முஸ்லிம்களிடையே சிங்கள மொழித்திறன் இருக்கவில்லையென்றோ, பல அவ்வாறான காரணங்கள் இருந்தபோதிலும் கூட முஸ்லிம்கள் இந்தத் துறையிலே முயற்ச்சி செய்தார்களா என்று பார்த்தால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நூறு வருடங்களுக்கு முன் வீழ்ச்சியடைந்த இஸ்லாமிய கிலாபாவின் பிறகான முஸ்லிம்கள் அனுபவித்த அதன் விளைவுகளும், முஸ்லிம்கள் மீது பல்வேறு வகையான அரசியல், பொருளாதார இராணுவ தாக்கங்கள் இவ்வுலகில் நடந்து கொண்டிருக்கின்ற அந்த சூழலில், இஸ்லாம் மீண்டும் மிக விரைவாக தலைதூக்கி முஸ்லிம்கள் குர்ஆன் மீதும் சுன்னாமீதும் விரைவாக வருவதை பலரும் அவதானித்தார்கள், இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் கூட இந்த மறுமலர்ச்சியை காணக்கூடியதாக இருந்தது, மேலும் பல அந்நிய மக்கள், இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அதனை தமது மார்க்கமாக ஏற்றுக்கொண்டார்கள், இந்த சூழலில் ஸ்ரீலங்காவில் இருக்கின்ற சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகவுமே அதிகரித்துக்கொண்டே போனது. அதே போல இஸ்லாத்திற்கு எதிரான சக்திகளும் இவற்றை பொறாமைக் கண்கொண்டு பார்த்தர்கள் என்பது உண்மை, பௌத்த பிக்குகள் முன்எப்போதும் எந்த வகையிலுமே இஸ்லாத்தையோ, இஸ்லாமிய புத்தகங்களையோ, படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலிருந்தவர்கள், இஸ்லாத்தைப்பற்றி அறிய அதைப்பற்றி பல்வேறுவிதமாக கதைக்கத் தொடங்கினார்கள், ஆனால் எங்கிருந்து இவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்டார்கள் என்பதைத்தான் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சி.என்.என் இடமிருந்தோ, பொக்ஸ் போன்ற சியோனிஸ பின்னனி கொண்ட ஊடகத்திடமிருந்தோ, இஸ்லாமியோபோபிக்கை முன்கொண்டு செல்பவர்களிடமிருந்தோ தான். உதாரணமாக ஜிஹாதைப்பற்றி தெரிய வேண்டுமென்றால் சம்பிக்க ரணவக்க எழுதிய மிகவுமே பிழையான (டிஸ்டோர்டட்) விளக்கங்களைக் கொண்ட புத்தகங்களால் தான் சிங்கள மக்கள் ஜிஹாதையோ, பொது பல சேனா போன்ற இயக்கங்கள் தான் இஸ்லாம் என்றால் என்ன, ஹலால் என்றால் என்ன, என்பதைப்பற்றியேல்லாம் இவர்கள் இஸ்லாத்தைப் பிழையாக சித்தரிக்கத் தொடங்கினார்கள். 

இது உலகலாவிய ரீதியில் இஸ்லித்தின் வளர்ச்சிக்கு பயந்து, முஸ்லிம்களை வலுவிழக்கச்செய்ய வேண்டும் என்பதற்காக பல பில்லியன் டொலர்களை செலவளித்து இயங்கும் பல்வேறு உலக சக்திகள், இதற்கு துணையாக இருந்தது. ஊதாரணாக ஒவ்வொரு மனிதரும் என்ன உடை உடுத்தாலும், மற்றவருக்கு அது பிரச்சனையில்லை என்று இருந்த நாடு, ஒரு பிக்கினியோடு, கடலோரத்திலோ, இலங்கையின் பாதையோரங்களிலோ, போய்க்கொண்டிருப்பதால், அதன் தாக்கம் இளைஞர்கள் மத்தியில், எவ்வாறு அவர்களைத் தூண்டி, அவர்களது ஹோமோன்களை பாதிக்கும் என்பதை விட முகத்தை மூடி ஒழுங்காக அணிந்து செல்கின்ற முஸ்லிம்கள் தான் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மிகவுமே செயற்கைத்தனமாக (ஆர்டிபிஸியல்) எந்த வகையான உண்மையுமில்லாமல், உருவாக்குகின்றார்கள், ஆனால் அதேமாதிரி கன்னியாஸ்திரிகள் (நன்ஸ்) அழகாக மூடிக்கொண்டு முஸ்லிம்கள் போகின்ற மாதிரி போனால், அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. தர்க்க (லோஜிக்) ரீதியான, பொது அறிவு கூட மாற்றமடைந்துள்ளது, இவ்வாறான சிந்தனை மனித சிந்தனையில்லை, அவர்களாகவே உருவாக்கிய செயற்கைத்தனமான சிந்தனையாகும், இதுவே எமக்கான சிறந்த உதாரணமாகும், அவர்கள் எவ்வாறு இஸ்லாத்தை பிழையான கண் கொண்டு பார்க்கின்றார்கள் என்பதற்கு.

இவ்வளவு கடைகளும், பள்ளிகளும் எரிக்கப்பட்டதற்குப் பிறகும் கூட, இன்றும் கூட இஸ்லாத்தை அவர்களுக்கு சொல்லவேண்டும், அவர்களுக்கு அதனை விளங்கப்படுத்த வேண்டும், அதற்காக எங்களது காசுகளையும், சொத்துக்களையும், சக்திகளையும் செலவளிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அவர்களைக்கூப்பிட்டு தன்சல் கொடுப்பதும், பிக்கு மாருக்கு தான கொடுப்பதும், அவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் கொடுப்பதனால் மட்டும், இவர்கள் மனதை மாற்றி இவர்கள் எங்களுக்கு தேவையான மாதிரி தொடர்ந்தும் எம்மை வாழ விடுவார்கள் என்ற உறுதிநிலையைத் தரக் கூடும் என்று முஸ்லிம்கள் இன்னும் பிழையாக எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒரே ஒரு வழிமுறைதான் தற்போதைய இந்நிலைமையை மாற்றக்கூடியது என்றால், முஸ்லிம்கள் தீவிரமாக சிங்களவர்கள் மத்தியில் இஸ்லாமிய தஃவாவை எத்திவைக்க வேண்டும், அதனால் எதிர்ப்புக்கள் ஏற்படுகின்றபோதிலும் கூட, இந்த தஃவாவின் ஊடாக அவர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள், அவர்களே இப்போராட்டத்தை முன்கொண்டு செல்வார்கள், முஸ்லிம்கள் அவர்களது பணியை செய்ய தவறவிடுகின்ற போது.

எந்த ஒரு முஸ்லிமுக்கும் எந்த வகையான கஷ்டநிலமை வந்த போதிலும், எந்த வகையான பிரச்சனை வந்த போதிலும், அவர்கள் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் தான் போய் அதில் என்ன வழிகாட்டல்கள் இருக்கின்றன என்பதைத்தான் பார்க்க வேண்டும், இன்று நாங்கள் பார்க்கின்றோம் நிறையப் பேர் ஜும்மாவில் தீர்வுகள் வழங்குகின்றார்கள், குர்ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ தீர்வுகளை முன்வைக்காமல், எல்லாமே அவர் அவர்களது பகுத்தறிதவிலிருந்தே வழங்குகின்றார்கள், இப்படி செய்தால், அப்படியிருக்கும், அப்படி செய்தால் இப்படியிருக்கும் என்று, சிலர் அவ்வளவும் வெறுமனே ஊடகத்தால்(மீடியா) மட்டுமே எங்களுக்கு இதனைத் தீர்க்க முடியும் என்றும்.

அல்லாஹ்விடம் தான் நம்பிக்கை வைக்கவேண்டும்;, அல்லாஹ்விடமிருந்துதான் பாதுகாப்பும் வெற்றியும் வருகின்றது, அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இப்படி நடந்திருக்காது, இவ்வாறான இஸ்லாத்திற்கும் இஸ்லாத்தின் எதிரிகளுக்குமிடையிலான போராட்டங்களுக்கான மூலகாரணம் என்ன என்பதை குர்ஆன் எங்களுக்கு கற்றுத் தருகின்றது.  பனூ இஸ்ரவேலர்கள் மீது மற்ற மக்களை அல்லாஹ் அனுப்பி அவர்களை தாக்க வைத்ததற்கான காரணம் என்ன? அதுபற்றி குர்ஆன் என்ன சொல்கின்றது, அவர்களுக்கு மக்களை வழிகாட்டுவதற்காக தௌராவை இறக்கி அதன்படி அவர்கள் மக்களுக்கு மத்தியிலே அல்லாஹ்வை எவ்வாறு வணங்க வேண்டும் என்றும், இஸ்லாமிய சக்திகளுக்கெதிராகப் போராடி இஸ்லாமிய சட்டங்களை நிலைப்படுத்த வேண்டும் என்றும், என்ற அந்தப் பொறுப்பை பனூ இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான், ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் அவர்களது புத்தகங்களை அவர்கள் முதுகுக்குப் பின்னாலே வீசியபடியால்தான், அல்லாஹ் அவர்கள் மீது தொடர்ச்சியாக பல தண்டனைகளை அனுப்பினான் என்பதை, சூரதுல் பகராவிலே, குர்ஆனிலே தெளிவாகச் சொல்லப்படுகின்றது, எங்களுக்கு ஒரு பாடமாக, நாங்களும் அவ்வாறு எங்களது புத்தகங்களை பின்னால் போட்டுவிட்டு நாங்கள் செய்யவேண்டிய எமது பொறுப்பாகிய தஃவாவை, இஸ்லாத்திற்காக எமது உயிர்களையும், உடமைகளையும் அர்ப்பணிக்காமல், இது எல்லாவற்றையும் நாம் விட்டுவிட்டு, நாங்கள் எங்களது சுயமான (ஓவ்ன் விய்வ்), பிழையான பகுத்தறிவு (டிஸ்டோர்டட் ரஸனல் விய்வ்) பார்வையை, எவ்வாறு பனூ இஸ்ரவேலர்கள் செய்தார்களோ, அவ்வாறே நாமும் போனால், பனூ இஸ்ரவேலர்களுக்கு நடந்த அனைத்தும் எமக்கும் நடந்து, எங்களது சமூகம், வேறு ஒரு சமூகத்தால் மாற்றீடாக்கப்படும் (ரீப்லோஸ்), குர்ஆனில் சொல்வது போன்று, எனவே ஒவ்வொரு இலங்கையிலுள்ள முஸ்லிம் ஆய்வாளர்களும், குர்ஆன் மற்றும் சுன்னாவின் பால் மீள வேண்டும், மேலும், அவர்கள் இந்தப்பிரச்சனைக்கு குர்ஆன் சுன்னாவின் நிழலில் என்ன தீர்வு என்பதை ஆராயவேண்டும், உதரணமாக, தற்பாதுகாப்பு, குர்ஆன் சுன்னாவில் மிகத்தெளிவாகக் கூறப்பட்ட ஒரு விடயம்தான், எப்படி உங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்வது, அந்தப்பாதையில் நீங்கள் இணையும் போது உங்களுக்கு ஏதும் பாதிப்பு வந்தால் நீங்கள் ஷஹீதாக மரணிக்கின்றீர்கள்.

5 comments:

 1. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
  (அல்குர்ஆன் : 16:125)

  ReplyDelete
 2. இஸ்லாத்தை திட்டமிட்ட முறையில் மற்ற மகக்களுக்கு எத்திவைப்பதோ
  அல்லது அவர்களிடம் கொண்டு செல்வதற்கோ நாம் முயற்சிப்போமானால் தற்போதுள்ள
  சூழ்நிலையில் அது வேறு விவகாரங்களை ஏற்படுத்தி தேவையற்ற பிரச்சினைகளை தோற்று
  வித்துவிடும் .எனவே நாம் முதலில் கவனிக்க வேண்டிய விடயம் இஸ்லாத்தை போதிப்பதை விட நாம்
  எல்லோரும் எல்லா சந்தர்பங்களிலும்
  இஸ்லாமியனாக வாழ்ந்து காட்ட வேண்டும். எமது நட உடை பாவனைகள்
  மற்றும் எமது செயற்பாடுகள் எல்லாம்
  மற்ற சமூகத்தவர்க்கு அச்சத்தையும்
  எரிச்சலையும் தேவையற்ற போட்டி
  பொறாமைகளையும் ஏற்படுத்துவதாக அமயைாமல் எம்மீது ஒருகண்ணியத்தையும் அன்பயும் அனுதாபத்தையும் தோற்றுவதாக இருக்க வேண்டும். குறிப்பாபாக அவர்களுடைய
  சமய அனுஸ்டானங்கள் கலாசார நடவடிக்கைகள் போன்றவைகளுக்கான கௌரவத்தையும் கண்ணியத்தையும் எமது சமய வரையறைக்குட்பட்டு
  நாம் வழங்க எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் மூலம்
  எமது பண்பாடுகளும் மனிதாபிமானங்களும் அவர்களால்
  கவரப்பட்டு அவர்களாகவே இஸ்லாத்தை அறிய ஆவலுறும் நிலமை
  தோன்றாத வரை இந்த நாடிலே
  எமக்கு பிரச்சினைகள் முடியாது
  என்பதற்கு எவ்வித உத்தரவாதமும்
  இல்லை என்பதை எமது அரசியல்
  தலைமைகள் தொடக்கம் எல்லா
  மட்டங்களிலுமுள்ள ஏனைய நாம்
  அனைவரும் உணர்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 3. முதலில் இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கு எத்தி வைப்போம். ஏதோ முஸ்லிம்கள் எல்லாம் நேர்வழியில் இருப்பது போல நினைத்து கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 4. Rifan is 100% correct. Muslims are not 100% Muslims. Only the image ( Beard, thobe, Miswak, Worry beads,) is changed not the heart and deeds. Still cheques issued by most Muslims are bounced; promises broken, sold items are defective or over priced, traffic rules are violated, common decency and etiquette are not adhered to, public passages are blocked, Three wheel charges are hiked, human sympathy is not seen; extravagance is sky rocketing; Food is wasted in hotel parties while poor ones are hungry. etc

  ReplyDelete
 5. Rifan is 100% correct. Muslims are not 100% Muslims. Only the image ( Beard, thobe, Miswak, Worry beads,) is changed not the heart and deeds. Still cheques issued by most Muslims are bounced; promises broken, sold items are defective or over priced, traffic rules are violated, common decency and etiquette are not adhered to, public passages are blocked, Three wheel charges are hiked, human sympathy is not seen; extravagance is sky rocketing; Food is wasted in hotel parties while poor ones are hungry. etc

  ReplyDelete

Powered by Blogger.