Header Ads



துப்பாக்கிகளுடன் கைதான, மைத்திரி குணரத்ன

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் இருந்து கொழும்பு வரை பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குறித்த பேரணி ஆரம்பமானதை தொடர்ந்தே ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்ரி குணரத்ன துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி – கெடம்பே விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர், கெடம்பே மைதானத்திற்கு அருகில் இந்த பேரணி ஆரம்பமானது.

இன்று மாலை கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் மைத்திரி குணரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கடுகண்ணாவ பொலிசாரால் கைது செய்யப்பட்டார். 

பின்னர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மைத்திரி குணரத்ன, கைத்துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை காண்பித்ததையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.