"ஐக்கிய தேசிய கட்சியை வேண்டாம் என, ஒதுக்கினால் புதிய பயணத்தை தொடர தயார்"
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் பிரதமரின் கரங்களை பலப்படுத்தி, புதிய பயணத்தை தொடர தயார் என அமைச்சர் லக்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டு வந்தது. தமக்கே, நாடாளுமன்றில் பெரும்பான்மையுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியை வேண்டாம் என ஒதுக்கினால், புதிய பயணத்தை தொடர தயார்.
பெப்ரவரி மாதம் 10 திகதிக்கு பின்னர் யார் தேர்தலில் வெற்றி பெறுவர்கள் என தெரியவரும் எனவும் அமைச்சர் லக்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Post a Comment