இலங்கை வரும் வெற்றிக் கிண்ணம், பார்வையிடவும் வாய்ப்பு
ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ள 54 நாடுகளில் இலங்கை முதலாவது நாடு என்பது சிறப்பம்சமாகக் காணப்படுகின்றது.
குறித்த பிபா காற்பந்து கிண்ணம் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
Post a Comment