புலிகளின் பெறுமதிமிக்க, சொத்துக்களை விற்க திட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசு தயாராகி வருவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுமார் 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் காணப்படும் காணியொன்றே இந்தச் சொத்துக்களில் மிகவும் பெறுமதி வாய்ந்தது.
வன்னிப் போருக்கு முன்னதாக இந்தக் காணி தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை. வெள்ளவத்தையில் அடுக்கு மாடி வீடொன்றும், அச்சகமொன்றும் இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த பணமும் அரசுடைமையாக்கப்படவுள்ளது.

What happened to to Stolen Gold?
ReplyDelete