இமான் அகமது, அபுதாபியில் மரணமடைந்தார்
உலகின் குண்டான பெண்ணாக கருதப்படும் இமான் அகமது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
எகிப்து நாட்டை சேர்ந்தவர் இமான் அகமது (36), இவர் 500 கிலோ எடையுடன் உலகின் குண்டு பெண்ணாக திகழ்ந்து வந்தார்.
தனது உடல் எடையை குறைக்க சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா வந்த இமான் மும்பை தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார், பல்வேறு சிகிச்சைகளுக்கு பின்னர் அவரின் எடை சிறிதளவு குறைந்து.
பின்னர் இந்தியாவிலிருந்து அபுதாபிக்கு சென்ற இமான் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி உடல் எடை குறைப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இமான் தற்போது உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக சிறுநீரகம் மற்றும் இதயம் சம்மந்தமான கோளாறுகள் இமானுக்கு அதிகரித்த நிலையில் அவரின் உயிர் பிரிந்துள்ளது.
அபுதாபி மருத்துவமனையில் 20 மருத்துவர்கள் இமானுக்கு சிகிச்சையளித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment