Header Ads



சட்டமா திணைக்களத்தின் சோம்பேறித்தனம் - ஹர்ஷ சில்வா கடும் தாக்கு

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள ஊழல், மோசடிகள் தொடர்பிலான 87 ஆவணக் கோவைகளையும் விரைவில் விசாரணைக்குட்படுத்துமாறு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய 87 ஊழல் மோசடிகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முடிவடைந்ததன் பின்னர் அவற்றின் ஆவணக் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனினும், இதுவரை அந்த ஆவணக்ேகாவை தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்ைககளும் எடுக்கப்படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் கால தாமதம் மேற்கொள்வதனை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் கூறினார். சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சோம்பேறித்தனமான செயற்பாடுகள் உண்மையில் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. எனினும் திறைசேரி முறிகள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்ட விதமானது அவர்களால் மேலும் திறம்பட செயற்பட முடியுமென்பதனை எமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதென்றும் அவர் கூறினார்.

இவ்விடயத்தை பிரதமர் மற்றும் நீதி அமைச்சருக்கு பல ஐ.தே.க எம்.பிக்கள் சுட்டிக்காடியுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து நியாயமான தீர்ப்பு ஒன்றினை எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் போன்று அல்லாமல் இந்த அரசாங்கத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமான அங்கமாக செயற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டே முன்னர் சட்டமா அதிபர் திணைக்களம் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமாவானது கடந்த அரசாங்கத்தில் காண முடியாத புதிய கலாசாரத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே இப்புதிய கலாசாரத்தை தோற்றுவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் பில்லியன் ரூபாய் பெறுமதியான அரசாங்க சொத்துக்கள் மோசடிக்கு உட்படுத்தப்பட்டன. எனினும் எவரும் அவைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரவில்லை.சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கெதிரான விசாரணைகளை முன்னெடுக்கின்றனவே தவிர கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

1 comment:

  1. Your people are sleeping until Ravi's resignation. Why did you raise this long time ago????????/

    ReplyDelete

Powered by Blogger.